கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிகளை மீறியதால் நடவடிக்கை

viduthalai
1 Min Read

மதுரை, ஜூன் 28 மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் இரண்டு கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் இயங்கியது தெரியவந்தது. இதேபோல் இந்த கல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ஆழத்திற்கு விதிகளை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதும் உறுதியானது. இதையடுத்து, ஒரு கல் குவாரியின் உரிமையாளர் ஆனந்த்சிவாவுக்கு ரூ.7 ேகாடியும், மற்றொரு குவாரியின் உரிமையாளரான இன்பராஜூக்கு ரூ.8 கோடியும் அபராதம் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், குறிப்பிட்ட தொகைக்குரிய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *