புதுச்சேரி, ஜூன் 25 பள்ளிகள் திறந்து 40 நாட்களாகியும் புதுச்சேரியில் இதுவரை மாணவர்களுக்கு சீருடை வழங்கவில்லை மொத்தம் புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகள் – 236, நடுநிலைப்பள்ளிகள் – 48, உயர்நிலைப் பள்ளிகள் – 73, மேல்நிலைப் பள்ளிகள் – 58, சிறப்பு பள்ளிகள் புதுவை, காரைக்காலில் தலா ஒன்று உள்ளன.
பள்ளிகள் திறப்பு
1 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் நடப்புக் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதன்பின் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, மீண்டும் பள்ளிகள் கடந்த 2-ஆம் தேதி திறக்கப்பட்டன.
மடிக்கணினி
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது மாணவ, மாணவிகளுக்கான சீருடை, நோட்டு, புத்தகம், சிறப்புப் பேருந்து சேவை சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவைஇலவசமாக வழங்கப்படுகின்றன., நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு ‘ஸ்கூல் பேக், (ஷூ) ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
பெற்றோர்கள் தவிப்பு
ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் சீருடைகள் இதுவரை வழங்கப்படாததால் பழைய சீருடைகளை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து வருகிறார்கள். சில மாணவர்களின் சீருடைமோசமாக இருப்பதை காண முடிகிறது. ஒரு சில வகுப்புகள நாள்தோறும் பள்ளி ஆசிரியர்களிடம் எப்போது நோட்டு-புத்தகம், சீருடைகள் வழங்கப் படும் என பெற்றோர் கேட்டு வரு கின்றனர். அவர்களுக்கு பதில் தரமுடி யாமல்ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
கால தாமதம்
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறிய மழுப்பலான பதிலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்கள் பெங்களூருவிலிருந்து வரவழைத்து விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி பெரும்பாலான வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. நடப்பாண்டில் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்ட சில வகுப்புகளுக்கான புத்தகங்கள் மறுபதிப்பு செய்து வருவதற்கு காலதாமதமாகிறது.
இம்மாத இறுதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகஙகள் வழங்கப்பட்டு விடும். ‘ஷூக்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுளளன. அந்த ‘ஷூக்கள் அடுத்த மாதம் (ஜூலை) அனைவருக்கும் வழங்கப்படும்’ என்றார். கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என்று கூறினார்.