அய்யா (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் பேசி, நாம் கேட்பது தான் பழக்கம். அவர் என்னைப் பேசுங்கள் என்று சொன்னார். அதனால் ஒலிபெருக்கியின் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன். இன்றைக்கு அரசியல், தேர்தல் என்று இரண்டு போர் மேகங்களும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆன்மிகத்தால் ஆண்டவனை கையில் எடுத்து, இந்த ஆட்சியை சூழ்ச்சி வலையில் வீழ்த்த நினைக்கின்ற கூட்டம் ஒருபுறம். அரசி யல் ரீதியாக, இல்லாத தோழமையை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, ED, CBI, IT என்று வலம் வருகின்ற ஒன்றிய அரசு மற்றொருபுறம். இவை இரண்டுக்கும் இடையில், ‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்; உறவுக்குக் கை கொடுப்போம்’ என்ற முழக்கத்தோடு, இரும்பு மனிதராக ‘‘எதுவரினும் அஞ்சோம்; நில்லோம்’’ என்று அரசியல் களத்திலே பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் எங்கள் அன்புத் தலைவர் தளபதி அவர்களின் அரசியல் வியூகம் ஒருபுறம். மீண்டும் 2026 ஆம் ஆண்டு இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சர், இரண்டாம் முறை ஆட்சிப் பொறுப்பு ஏற்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பது ஒருபுறம். இதை சொல்லால் சொல்லிவிட்டு நிற்காமல், ஒரு ‘ரோல் மாடலாக’ அன்பிற்கினிய அருமை அய்யா 92 வயதைக் கடந்த வீரமணி அய்யா அவர்களை ‘ரோல் மாடலாக’ எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ‘செம்மொழி நாள்’ உறுதி மொழி எப்படி இருக்க வேண்டும் என்றால், அவருடைய (திராவிடர் கழகத் தலைவர்) அன்றாட நடவடிக்கைகள்போல், இயக்கத்திலே (தி.மு.க) இருக்கின்ற முக்கிய பொறுப்பிலே இருக்கின்றவர்கள் முதற்கொண்டு, என்னைப் போன்ற அமைச்சர்கள் முதற்கொண்டு, சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதற்கொண்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முதற்கொண்டு, கழகத்தின் இதயமாக இருக்கின்ற பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் முதற்கொண்டு முழு நேரம் நம்முடைய அய்யாவைப் போல் உழைத்தால் 200 அல்ல, 234–யும் பெறுவோம், வெற்றி பெறுவோம் என்ற உறுதியை இந்த செம்மொழிநாள் விழாவில் ஏற்க வேண்டும் என்று சொல்லி கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும் மங்கா புகழ் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் புகழ் இருக்கும் என்று கூறி அமர்கிறேன். நன்றி! வணக்கம்!
– வில்லிவாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில்,
இந்து அறநிலையத் துறை
அமைச்சர் பி.கே. சேகர்பாபு
ஆற்றிய உரையிலிருந்து, 24.06.2025)