தேச பக்தியும், தேசியமும் பழமையைப் பார்த்துக் கொண்டு பின்னால் போகப் பார்க்கின்றனவே தவிர முன்புறம் பார்க்கின்றனவா? தேசியத்துக்கும், புதுமைக்கும் சென்மப் பகையாய் இருந்து வந்திருக்கின்றது. தேசியம் என்றாலே பழமை என்று கருதப்பட்டும் விட்டது. புதுமையோ தேசத்துரோகம் என்றாகி விட்டது. ஆகவே கல்வி என்று பெயர் வைத்து, அதன் சாக்கில் மதத்தைப் போதித்துத் தேசியம் என்ற உணர்ச்சியையும் அதன் மூலமாகவே ஏற்றிவிட்டால் ‘குரங்குக்குக் கள் வார்த்தது போல்’தான் ஆகுமே தவிர, அங்குப் பகுத்தறிவிற்கும், ஆராய்ச்சிக்கும், முற்போக்குக்கும், சுதந்திரத்திற்கும் இடமிருக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’