கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai

21.6.2025

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* ரூ.80 கோடியில் பிரமாண்டமாக புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார். கல்சிற்ப தேருக்கு சிறப்பூட்டும் வகையில் லேசர் ஒளி-ஒலி நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது.

தி இந்து:

* ‘கங்கையை சுத்தம் செய்தல்’ என்பது தேர்தல் விழாவா? காங்கிரஸ் கேள்வி. பிரதமர் நரேந்திர மோடி நமாமி கங்கை திட்டத்தின் கீழ் ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (STP) திறந்து வைத்த நாளில், ஒன்றிய அரசும் பீகார் அரசும் கங்கையை சுத்தம் செய்யும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளில் நதியிலிருந்து மாசுபடுத்தும் பொருட்களை அகற்றுவது வெறும் “தேர்தல் விழாவாக” மாறி விட்டது என்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம்.

* கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக பாஜக ரூ.1494 கோடி செலவிட்டுள்ளது. இது மொத்த கட்சிகளின் தேர்தல் செலவினங்களில் 44.56 % ஆகும்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘பொய்களின் மழை’: பிரதமர் மோடியின் பீகார் கருத்து களை ஆர்ஜேடி தலைவர் லாலு கடுமையாக சாடியுள்ளார். மேலும் உடைந்த பாலத்தைப் பற்றி, செயற்கை நுண்ணறிவு (AI) காட்சிப்பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். AI உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த காட்சிப்பதிவில், பிரதமர் மோடியும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் உடைந்த பாலத்தின் கீழ் நடனமாடுவதையும் காட்டியது, இது  நிதிஷ் குமார் ஆட்சியின் கீழ் உள்கட்டமைப்பு சீர்குலைவு மற்றும் ஊழலை குறிக்கிறது.

* ‘ஆங்கிலம் பேச வெட்கப்படுகிறேன்’ என்ற அமித் ஷாவின் கருத்துக்கு கேரளா இடதுசாரி அரசு எதிர்ப்பு. அமித்ஷாவின் அறிக்கை அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் “குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியலை” பிரதிபலிக்கிறது என்றும், அது மாணவர்களின் அறிவையும் உலகளாவிய கண்ணோட்டத்தையும் குறைக்க மட்டுமே உதவும் என்றும் கேரள உயர்கல்வி அமைச்சர் ஆர் பிந்து கண்டனம்.

தி டெலிகிராப்:

* ஒடிசா பாஜக அரசின் ஓராண்டு விழா: கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள் முதல் வயிற்றுப்போக்கு தொடர்பான மரணங்கள் மற்றும் காலரா தொற்று வரை, பல பிரச்சினைகளில் திண்டாடும் ஒடிசா பாஜக அரசு. “இரட்டை இயந்திரம்” அரசாங்கத்தின் திறமையின்மை குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனம் செய்துள்ளன.

குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *