சென்னை, ஜூன் 21 டில்லியில், அய்.ஏ.எஸ். அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய ”மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்” (சிறு துளியாய் கடல் ஆவேன்) என்ற புத்தகத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
அன்னிய மொழிகளால் இந்தி யாவை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஏனெனில், ஒருவரின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் மதத்தை அன்னிய மொழியில் புரிந்து கொள்ள முடியாது. இந்த நாட்டில் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் வெட்கப்படும் காலம் விரைவில் வரும். அது வெகு தொலைவில் இல்லை என்றார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையாகி உள்ளது.
அவருடைய இந்த கருத்துக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘‘மக்கள் மீது உங்களுக்கு விருப்பமானதை திணிப்பதும், இந்திய நாட்டின் பன்மைத்துவத்தை அழிக்க நினைப்பதும்தான் அவமானப்பட வேண்டிய ஒரே விஷயம்’’ என்று கூறியுள்ளார்.