கடந்த ‘ஞாயிறு மலரில்’ வெளியான போபால் விசித்திர மாடல் கொண்ட பாலம் தொடர்பான செய்தி, இப்பாலம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.
இதனை அடுத்து போபால் நகர நிர்வாகமும் மாநில நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து அப்பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வரைபடம் தயாரித்துகொண்டு இருக்கின்றன.
இங்கு பல கேள்விகள்
இவ்வளவு மோசமான பாலத்திற்கு திட்டம் போட்டுக் கொடுத்தவர்கள் யார்?
இதற்கு அனுமதி கொடுத்தவர்கள் யார்?
கட்டிய கட்டுமான நிறுவனம் பாலத்தின் கட்டுமானத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆய்வறிக்கை யாரிடம் சமர்பித்தது?
திட்ட அறிக்கை தயாரிப்பது முதல் கட்டுமானம் முடியும் வரை செலவழிக்கப்பட்டப் பணம் திரும்பப் பெறப்படுமா?
அபிசார் சர்மா என்ற போபால் மாநகராட்சிதொடர்பான செய்தி எழுதும் ஊடகவியலாளர் இந்தப்பாலத்திற்கு 33 கோடி வரை செலவு செய்யப்பட்டது என்று எழுதியுள்ளார்.
அப்படி என்றால் புதிய பாலத்திற்கு இதைவிட 2 மடங்கு செலவாகும்.
அதாவது கிட்டத்தட்ட ரூ 75 கோடிகள் சூறையாடப் பட்டுள்ளது!
மக்கள் பணம் இவ்வாறு சூறையாடப்பட்டது குறித்து இதுவரை மத்தியப் பிரதேச அரசு அமைதி காப்பது ஏன் போன்ற கேள்விகளுக்கு விடை – மோடியின் ஊடகவியாளர் சந்திப்பு போல்தான் இருக்கும்!