சென்னை, ஜூன்.20- தமிழ்நாட் டில் புறமுதுகிட்டு ஓடும் அள வுக்கு மிகப்பெரிய தோல்வி பா.ஜனதா வுக்கு கருத்திருக்கிறது என செல்வப் பெருந்தகை தெரிவித்து உள்ளார்.
கக்கன் பிறந்தநாள்
சென்னை சத்தியமூர்த்தி பவனில், மேனாள் அமைச்சர் தியாகி கக்கனின் 118-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கும், சிலைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ் மக்கள் ஒருபோதும் பாசிச வாதிகளை ஆதரிக்க மாட்டார்கள், ராமன் பிறந்த (!) மண்ணில் பா.ஜனதா தோல்வியடைந்தது. அதே போன்று முருகன் தமிழ் கடவுள், தமிழ் நாட்டில் புறமுதுகிட்டு ஓடும் அளவிற்கு பா.ஜனதா மிகப்பெரிய தோல்வி அடையும். தமிழ்நாட்டில் தமிழர்களின் வரலாற்றை, மரபுகளை, கலை, இலக்கியம் என்ற பெருமையை பா.ஜனதா ஒரு போதும் சிதைக்க முடியாது. அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. கீழடி, திருச்செந்தூர், வடக்குப்பட்டு என எல்லா அகழ்வாராய்ச்சிலும் தமிழ்நாட்டின் பெருமை, தமிழர்களின் பெருமை அமெரிக்கா வரை சென்று கார்பன் சோதனை செய்து 3 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.
உலக நாகரிகத் தில் பெருமைக்குரிய நாகரிகம் தமிழ் நாகரிகம் என்று அமெரிக்காவே சான்று அளித்துள்ளது. எனவே, அறிவியல் ரீதியாக இதை நிரூபணம் செய்த பிறகும், மீண்டும் மீண்டும் பா.ஜனதா ஆட்சியாளர்கள் தமிழர்களின் பெருமையையும், வரலாற்றையும் சிதைப்பது கண்டிக்கத் தக்கது.
பெயருக்காக….
நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கொடுத்த அழுத்தத்தை தாங்க முடியாமல்தான் பெயருக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம் என்று ‘பா.ஜனதா சொல்லி இருக்கிறது. ஆனால், இது ஒரு கானல் நீர்தான்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசும், விடுதலை சிறுத் தைகள் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் எந்த ஜோதிடரிடம் கேட்டு தெரிந்து கொண்டார் என்று தெரிய வில்லை. எங்கள் அகில இந்திய தலைமை என்ன வழி காட்டுகிறதோ? அதன்படி தான் தமிழ்நாடு காங்கிரசின் செயல்பாடு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.