21.6.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை நியமனம் செய்திடும் மசோதா பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேறியது.
* பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தான் கலந்து கொள்ளப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* தந்தை பெரியாரையும் அன்னை மணியம்மையாரை யும் இழிவுபடுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக ஆதரவாளர் கைது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆளும் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என மணிப்பூரின் ஒன்பது பேர் கொண்ட பாஜக எம்.எல்.ஏக்கள் குழு பிரதமரிடம் மனு.
* ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் ம.பி. சாட்னா மாவட்ட ஆட்சியர் பங்கேற்றதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு. தவறில்லை என்கிறார் அந்த ஆட்சியர்.
தி இந்து:
* இந்தியாவில் உள்ள ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய கவலைகளை பிரதமர் மோடியிடம் பேசுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 70க்கும் மேற்பட்ட அமெரிக்க செனட்டர்கள் மற்றும் பிரதிநிதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
– குடந்தை கருணா