சாமியார்களின் ரகசிய பூஜை என்பதே பாலியல் வன்கொடுமைதானா?

Viduthalai
2 Min Read

கடப்பா, ஜூன் 22 ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த பெண் ஒருவர் ஏழ்மையால் அவதி அடைந்து வந் தார். மேலும் தனது 2 மகள்களுக்கு வயதாகியும் திருமணம் ஆகாததால் வேதனை அடைந்தார். இவர்களது பொருளாதார பிரச்சினை குறித்து அறிந்த திருப்பதியை சேர்ந்த பிரியா என்ற பெண் அவர்களை நாடினார். அமானுஷ்ய பூஜை (ரகசியபூஜை) செய்தால் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என கூறினார்.

இதனை நம்பி அந்தப் பெண் தனது மகள்களுடன் கடப்பாவிற்கு சென்றார். புரோட்டூரில் இருந்த கும்பல் ஒன்று நள்ளிரவில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய் தனர். அப்போது சாமியார் ஒருவர் பெண்களை அமர வைத்து பூஜை செய்தார். அந்த நேரத்தில் இளம் பெண்களை மயக்கி கும்பல் ஒன்று பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த இளம்பெண்கள், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்தனர். காவல்துறையினர் வழக் குப் பதிவு செய்து பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். ஒரு சாமியார் தலை மையில் இருந்த கும்பல் அமிர்தா நகரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற காவலர்கள் அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

  திருமணமாகாதபெண்கள், குழந்தைப்பேறு இல்லாத பெண்கள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அமானுஷ்ய பூஜை என்ற பெயரில் நள்ளிரவில் மட் டுமே அவர்களை தனிமையில் அழைத்து வந்து பூஜை என்ற பெயரில் பாலியல் வன்கொடுமைகளை சில சாமியார் கூட்டம் செய்து வருகிறது, முக் கியமாக மத்தியப்பிரதேசம் முதல் ஆந்திரா வரை பாலியல் வன் கொடுமைச் சாமியார்களின் வலைப் பின்னல் உள்ளது. இவர்களிடம் ஒருமுறை சிக்கிய பெண்களை ஆபாசப்படம் எடுத்து தொடர்ந்து தொல்லை கொடுப்பார்கள். தொழி லதிபர்களின் ஆசைக்கு இணங்கச் சொல்லி மிரட்டுவார்கள்.  இதில் சிக்கிய பல பெண்கள் மிரட்டலுக்கு பயந்து வெளியே சொல்லாமல் விட்டு விடுகின்றனர்.  

இந்த நிலை யில் துணிச்சலுடன் வந்து புகார் அளித்த இளம் பெண் மூலம் -_  அப்பாவி பெண்களை பூஜைக்கு அழைத்து வந்து பாலியல் வன் கொடுமை செய்து விபச்சாரத் தில் தள்ளிய விவரங்கள் தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் திருப்பதியை சேர்ந்த சாமியாரையும்   அவருக்கு ஏஜெண்டுகளாக இருக் கும் பிரியா, நந்தியாலா ரவிக்குமார், கர்னூல் காந்தம்மா, கம்பன்கிரி ராமுடு, அனந்தபூர் வெங்கடேஷ், நாகராஜ் மற்றொரு ராமுடு ஆகியோரையும் கைது செய்தனர். இந்தக் கும்பலில் வலைப் பின்னல் பல மாநிலங்களோடு தொடர்புள்ள தால் இவர்கள் அமானுஷ்ய பூஜை என்ற பெயரில் இன்னும் எத்தனை பெண்களை பாலியல்வன்கொடுமை செய்து பாலியல் தொழிலில் தள்ளி விட்டுள்ளனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *