தமிழ்நாட்டின் இரும்புக்கால அகழாய்வுத் தளமான மயிலாடும்பாறை, கீழடி உள்ளிட்ட இடங்களை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கவும், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டுள்ள ஆதிச்சநல்லூர், சிவகலை கீழடி, கொற்கை, மயிலாடும்பாறை, கொடுமணல் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய 7 இடங்களுக்கு அதிக நிதி மற்றும் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் நாடாளுமன்ற விதி எண் 377-இன் கீழ் கோரிக்கை வைத்துள்ளேன்.
மேலும், தமிழ்நாட்டின் தொன்மைக்கானச் சான்றுகளைக் கருத்தில்கொண்டு, அகழாய்வுக்கு அதிக நிதி ஒதுக்கி, மாநில அரசின் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றும், பள்ளி மற்றும் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் இவ்வரலாற்றை சேர்த்து, தமிழர்கள் ஆற்றிய முக்கியத்துவத்தை பணியின் வரலாற்று வெளிப்படுத்தும் வகையில் தொடர்புடைய ஆன்-சைட் அருங்காட்சியகங்களை உருவாக்க வேண்டும் எனவும் இக்கோரிக்கையில் வலியுறுத்தியுள்ளேன்.