இந்திய கடலோர காவல்படையில் நாவிக் மற்றும் யாந்திரிக்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளது. 10, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். கடலோரப் படை தொழில்நுட்பப் பிரிவு மற்றும் பொது, உள்ளூர் பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளது.
இந்திய கடலோர காவல்படை தேர்வு 2025
பொது மற்றும் உள்நாட்டு கிளை கீழ் உள்ள நாவிக் மற்றும் தொழில்நுப்ட பிரிவில் உள்ள யாந்திரிக்ஸ் ஆகிய பதவிகளுக்கு விரும்பமுள்ள ஆண்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மொத்தம் 630 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்
நாவிக்: 570. யாந்திரிக்ஸ்: 60. மொத்தம்: 630.
மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெட்ரானிக்ஸ் என யாந்திரிக்ஸ் பதவியில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாவிக் பொது பணியில் 520 பணியிடங்கள், உள்நாட்டு கிளை பிரிவில் 50 இடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிகபடியாக 22 வயது வரை இருக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி: நாவிக் பதவிக்கு 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
யாந்திரிக்ஸ் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் (அல்லது) 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 3 அல்லது 4 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்கலாம்.
ஊதிய விவரம்: நாவிக் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.21,700 ஆகும். இதனுடன் கொடுப்பனை, அகவிலைப்படி ஆகியவை கூடுதலாக வழங்கப்படும்.
யாந்திரிக்ஸ் பதவிக்கு அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆகும். கூடுதலாக ரூ.6,200 மற்றும் கொடுப்பனை, அகவிலைப்படி வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பதவிகளுக்கு தகுதியானவர்கள் 4 கட்ட தேர்வு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் கட்டமாக கணினி வழி தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையும் பொருட்டு, இதில் மதிப்பீடு தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் உடற்தகுதித் தேர்விற்கு தகுதி அடைவார்கள். தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். மேலும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு இறுதி சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, காவல்துறை சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து, நான்காவது கட்டத்தில் INS Chilka-வில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்திய கடலோர காவல்படையில் சேர வேண்டும் என விரும்புகிறவர்கள் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதள வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் தொடங்கிய நிலையில் ஜூன் 25 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் கண்டிப்பாக இமெயில் மற்றும் செல்பேசி எண் கொண்டிருக்க வேண்டும். இதற்கு தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் செலுத்த வேண்டியது இல்லை.
இதற்கான முதல் கட்ட தேர்வு செப்டம்பர் இறுதியில் நடத்தவும், இரண்டாம், மூன்றாம் கட்ட தேர்வு நவம்பர் மற்றும் பிப்ரவரியில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்: 11.06.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2025
முதல் கட்ட எழுத்துத் தேர்வு: செப்டம்பர் 2025
இரண்டாம் கட்ட தேர்வு: நவம்பர் முதல் பிப்ரவரி 2026
மூன்றாம் கட்ட தேர்வு: பிப்ரவரி 2026 முதல் ஜூலை 2026