ரயில்வேயின் இணைய சேவை வழங்கும் நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள உதவி மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் விவரங்கள்
உதவி மேலாளர்: 30. துணை மேலாளர்: 18. மொத்தம்: 48
உதவி மேனேஜர் பதவியில் டெக்னிக்கல் பிரிவில் – 10 இடங்கள், மார்க்கெட்டிங் பிரிவில் – 8 இடங்கள், நிதி பிரிவில் – 4 இடங்கள் என நிரப்பப்படுகிறது. துணை மேலாளர் பதவியில் டெக்னிக்கல் – 10, டெக்னிக்கல் – 8 என நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு: உதவி மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம்.
துணை மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 30 வரை இருக்கலாம்.
இப்பதவிகளுக்கான வயது வரம்பில் ஒன்றிய அரசின் விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வருடங்கள் தளர்வு உள்ளது.
கல்வித் தகுதி: டெக்னிக்கல் பிரிவு உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எலெக்ட்ரிக்கல் அலல்து இதர பொறியியல் பிரிவுகளில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 5 வருடம் வரை தளர்வு உள்ளது.
மார்க்கெட்டிங் உதவி மேலாளர் பதவிக்கு எம்பிஏ அல்லது தொழில் நிர்வகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அனுபவம் அவசியமில்லை.
நிதிப்பிரிவு உதவி மேலாளர் பதவிக்கு எம்பிஏ அல்லது தொழில் நிர்வாகத்தில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இப்பதவிக்கு அனுபவம் அவசியமில்லை.
தொழில்நுட்ப பிரிவில் உள்ள துணை மேலாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல், டெலிகாம், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கட்டாயம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: உதவி மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரையும், துணை மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை.
இப்பணியிடங்களுக்கு இணைய வழித் தேர்வு மற்றும் நேர்காணல் வழியாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இணைய வழி எழுத்துத் தேவு 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். நேர்காணல் 50 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.railtel.in/ என்ற இணையதளத்தில் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.1,200 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.600 செலுத்த வேண்டும்.
இதற்கான இணைய வழி விண்ணப்பம் கடந்த மே இறுதியில் தொடங்கிய நிலையில், வரும் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம். தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பம் தொடங்கிய நாள்: 31.05.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2025
நேர்காணல் பின்னர் அறிவிக்கப்படும்