டில்லி தமிழர்களுக்கு
உதவிக்கரம் நீட்டிய மு.க.ஸ்டாலின்
உதவிக்கரம் நீட்டிய மு.க.ஸ்டாலின்
டில்லி மதராஸி கேம்ப்பில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்ட 370 தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஒரு முறை நிதியுதவியாக தலா ரூ.8 ஆயிரமும், ரூ.4 ஆயிரம் மதிப்பிலான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் பலி
வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. அனைத்து பன்னாட்டு விதிமுறைகளையும் மீறி இஸ்ரேல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் ஈரான் தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள ஊடங்கள் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
36 மணிநேரத்தில் 4-ஆவது விமானத்தில் கோளாறு!
அடுத்தடுத்து விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகளை அச்சத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. குஜராத் விபத்திற்கு பிறகு கடந்த 36 மணிநேரத்தில் ஏர் இந்தியா, சவுதி ஏர்லைன், லுஃப்தான்சா என 4 விமானங்கள் நடுவானில் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்தன. டில்லி – ராஞ்சி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் இன்ஜின் கோளாறால் மீண்டும் டில்லியில் தரையிறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை
உலகின் டாப் 100 பல்கலை.,களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது கிளையை சென்னை மற்றும் மும்பையில் அமைக்கிறது. இதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் அறிவுசார் நகரத்தில் அமையவுள்ள இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த படிப்புகள் கற்பிக்கப்படவுள்ளன. இப்பல்கலைக்கழகம் அமைய 18 மாத அவகாசம் உள்ளதால், கட்டணம், சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.