கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.6.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என நினைத்தோம். ஆனால் இன்னும் மாறவில்லை. தஞ்சாவூர் கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி 40 நாட்கள் ஆகியும், ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

* டெல்லி ’மதராசி கேம்ப்’ இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூ.50 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

* உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* வரும் 2027ஆம் ஆண்டில் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 2011 ஆம் ஆண்டு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ஒன்றிய அரசு முயற்சிப்பதால், ஜாதி வாரி கணக்கெடுப்பில் ஒன்றிய, மாநில ஓ.பி.சி. பட்டியல்களை இணைக்கக்கூடும் என்கிறார் கட்டுரையாளர் தீப்தி மேன் திவாரி.

* வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தனித்துவமாக இருக்கும். ஜாதி எண்ணிக்கை மற்றும் எல்லை நிர்ணயத்தால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் பதிலளிக்கப்படும். அரசு நிதியுதவி அளிக்கும் வளர்ச்சியிலிருந்து விகிதாசார ரீதியாக பயனடைந்த ‘உயர்’ ஜாதிகள் என்று அழைக்கப்படுபவர்களின் புள்ளிவிவர பெயர் தெரியாத தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்கிறார் பேராசிரியர் சதீஷ் தேஷ்பாண்டே.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 5.1% ஆக இருந்த நிலையில் மே மாதத்தில் 5.6% ஆக உயர்ந்துள்ளது,

 தி இந்து:

* மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கீடும் அடங்கும் என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று வெளியிட்ட அறிவிப்பில் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரியான கணக்கெடுப்பு பற்றி எந்த வித குறிப்பும் இல்லை என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டை அடுத்து இந்த விளக்கம்.

* ”நான் முதல்வன்” திட்டத்தின் பலன்: விருதுநகர் இலுபையூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவரான எம். அஜய் குமார், ரூர்கேலாவின் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIT) உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியலில் இடம் பெறுவதில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *