கீழடி குறித்து இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறதாம் ஒன்றிய அரசின் மலிவான அரசியலுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 11- மலிவான அரசியலுக்காக வரலாறு காத்திருக் காது என்று கீழடி குறித்த ஒன்றிய அமைச்சரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி தந்துள்ளார்.

கடும் கண்டனம்

ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சென்னையில் நேற்று (10.6.2025) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “கீழடி ஆய்வுகள் குறித்து இன்னும் அதிகமான அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டி இருக் கின்றன. அந்த முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும்” என்றார். ஒன்றிய அமைச்சரின் இந்த கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதலில் அவர்கள்  (ஒன்றிய அரசு) கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள்.அடுத்து ஆய்வு அதிகாரியை இடம் மாற்றினார் கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக சமர்ப்பித்த அறிக் கையை 2 ஆண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என் கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள்தான் வேறு வேறாக இருக்கிறது.

பூனை கண்ணை மூடிக்கொண்டு விட்டால்…

5,350 ஆண்டுகள் பழைமை யானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?

தமிழர்களை எப்போதும் இரண்டாம் தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாததாகத்தாலா? மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காக காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்!

பூனைக் கண்ணை மூடிக் கொண்டு விட்டால் உலகம் இருண்டு விடுமா என்ன?

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *