ஒற்றைப் பத்தி

viduthalai
2 Min Read

பாகிஸ்தானில் இருந்து வந்த சாம்பல்!

இந்துக்களின் புனித நதியாகப் போற்றப்படும் கங்கையில் கரைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து 400 பானைகளில் அடைக்கப்பட்ட சாம்பல் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளது. அந்நாட்டில் வசிக்கும் இந்துக்கள் இறந்த தங்கள் உறவினர்களின் சாம்பலை இவ்வாறு சேகரித்து வைத்து இங்கு அனுப்பியுள்ளனர். சுதந்திரத்திற்குப் பின், இவ்வாறு சாம்பல் அஸ்தி கொண்டு வரப்படுவது மூன்றாவது முறையாகும். இதற்குமுன் 2011, 2016ஆம் ஆண்டுகளில் இவ்வாறு நூற்றுக்கணக்கானவர்களின் சாம்பல் கங்கையில் கரைப் பதற்காகக் கொண்டு வரப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இறந்த தங்கள் உறவினர்களின் சாம்பலை 400 பானைகளில் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பி கங்கையில் கரைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இறந்தவர்களின் சாம்பலை ‘புனித’ நீர்(?) என்று கூறிக் கொள்ளும் கங்கை நதியில் கரைத்தால் அந்தச் சாம்பலுக்கு உரியவர்கள் மோட்சம் போவார்கள் என்பது இந்துக்களின் கெட்டியான நம்பிக்கையாம்!

முஸ்லீம் நாடான பாகிஸ் தானில் குடி இருந்தாலும், இந்துக்கள் இரத்தத்தில் இந்த நம்பிக்கை மட்டும் கங்கை நதிபோல், ஓடிக் கொண்டு இருக்கிறது.

சரி, இந்தப் புனித கங்கை நதிக்கு வருவோம்.

கங்கை 2225 கி.மீ. தூரம் பாய்ந்து ஓடுகிறது. பாவம் போக்குவதாகக் கூறப்படும் கங்கையில் தான் காசி நகர சாக்கடை முழுவதும்  கலக்கிறது. காசியில் மட்டும் இந்த வகையில் 20 மில்லியன் காலன் சாக்கடை நீர் கங்கையில் கலக்கிறது.

நாள்தோறும் 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்பட்டு அரையும் குறையுமாகக் கங்கையில் எறியப்படுகின்றன. 9,000 கிழட்டுப் பசுக்கள் கங்கையில் உயிரோடு தள்ளப்படுகின்றன. (‘வாழ்க கோமாதா புத்திரர்கள்!’)

2 லட்சம் மக்கள் பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இத்தொழி லில் வெளியேறும் ரசாயனக் கழிவுகளும், இந்தப் ‘புனித’ கங்கையில்தான் சங்கமமா கின்றன.

21.7.1997 ‘தி பயனியர்’ இதழில் ஒரு ஆய்வுத் தகவல் வெளி வந்தது.

உத்தரப்பிரதேசத்தில் கோயில் நகரங்களில் ‘எய்ட்ஸ் நோய்ப் பாய்ச்சல் என்பது பிரசித்தம். குறிப்பாக ஹரித்துவார், ரிஷிகேஷ், வாரணாசி, அலகாபாத் நகரங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வில் அச்சுறுத்தல் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

‘‘சுற்றுலா வரும் மேற்கத்திய பயணிகள் அதிக செலவில்லாத கஞ்சா மற்றும் ெஹராயினுக்கு அடிமையாகிறார்கள். நரம்புக் குள் போதை மருந்தை ஊசியின் மூலம் செலுத்திக் கொள்கிறார்கள்.

ஒருவர் பயன்படுத்திய சிரிஞ்சை மற்றவர்களுக்கும் பயன்படுத்துவதால் எய்ட்ஸ் கிருமி மிக வேகமாகப் பரவு கிறது’’ என்று அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ‘புண்ணிய’ பூமியில் ஓடும் கங்கையில் செத்தவர்களின் சாம்பலைக் கரைத்தால் மோட்சலோகத் துக்கு ‘டிக்கெட்’ கண்டிப்பாகக் கிடைக்குமாம்!

மக்கள் உயிரோடு விளை யாடுவோர் தண்டிக்கப்பட வேண்டாமா?

– மயிலாடன்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *