உலகின் பல நாடுகளில் பயணம் செய்து தந்தை பெரியார் கொள்கையை பரப்பும் பணியில்…

viduthalai
6 Min Read

ஆசிரியரின் ஆஸ்திரேலியா பயணம் சில பாடங்கள் (19)

சிறப்புக் கட்டுரை

வழக்குரைஞர்
அ. அருள்மொழி
பிரச்சாரச் செயலாளர்,
கழகம்

பாடம் 19

 தமிழரின் உயர்வே தலைவரின் பெருமிதம்!

22.3.2025மெல்பேர்ன் நிகழ்ச்சியில் ஆசிரியரின் உரை உணர்வுப் பெருக்குடன் அமைந்திருந்தது என்று குறிப்பிட்டேன். அதற்குக் காரணம் தந்தை பெரியார் காலம் முதல் திராவிடர் கழகத்தின் தொண்டர்களாக செயல்பட்ட கொள்கை வீரர்களின் குடும்பங்கள், வெவ்வேறு பணிகளில் சூழல்களில் வாழ்ந்தாலும் தந்தை பெரியாரின் தொண்டினை நன்றியோடு நினைக்கும் தமிழர்களின் குடும்பங்கள், தந்தை பெரியாரை அறிவியலின் சிறகுகளில் ஏற்றிச் செல்லும் புதிய தலைமுறை இளைஞர்கள், ‘பெரியாரைப் படித்தேன் – பெண்ணிய உரிமையை உணர்ந்தேன்…’ என்று கூறும் இளம் பெண்கள் என கலவையாகக் கூடியிருந்த கூட்டமும் அவர்கள் கல்வியால் உயர்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ள சிறப்பும் ஆசிரியருக்கு மிகுந்த பெருமிதத்தை ஏற்படுத்தியதுதான் என்பதை அவர் உரை உணர்த்தியது.

சிறப்புக் கட்டுரை

ஆசிரியர் உரையாற்றுகிறார் 

சிறப்புக் கட்டுரை

மும்மொழித் திணிப்பை எதிர்த்து

சிறப்புக் கட்டுரை

எழுத்தாளர் முத்துகிருஷ்ணனுக்கு சால்வை அணிவிக்கிறார் அண்ணாமலை மகிழ்நன்

சிறப்புக் கட்டுரை

நன்றி உரை ஆற்றிய தோழர் சுரேஷ்

“நாம் இப்போது நன்றாக இருக்கிறோம் நமக்கெதற்கு பெரியாரின் கருத்துகள் என்று நீங்கள் எண்ணி விடக்கூடாது. ஸநாதனமும் ஜாதியும் இந்த நாட்டுக்குள் வருகின்றன. அவை நம்மை பாதித்த பிறகு சிகிச்சை தரும் Curative முறையை விட வருமுன் காக்கும் Preventive முறைதான் சரியானது. அதற்காகப் போடும் தடுப்பூசி போன்றதுதான் தந்தை பெரியாரின் கொள்கை. ஏன் ஜாதி அவ்வளவு கொடியது என்றால் ஜாதியால் ஒருவன் படிக்கக் கூடாது என்று தடுப்பதும் அப்படிப் படித்தால் தண்டனை கொடுப்பதுமான கொடுமை இந்தியாவில்தான் நடந்தது அதனை தெளிவாக அம்பேத்கர் அவர்கள் கூறினார்.

தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு

பெண் குழந்தைகள் பிறக்கத் தடை- பிறந்தால் கங்கை நீரில் எறிந்தார்கள், வயல்களிலே புதைத்தார்கள், மீறி பிறந்து வளர்ந்த குழந்தைகளுக்கு வாழ உரிமையில்லை. உண்ணுவதற்கு உரிமையில்லை, பெண்கள் பேச உரிமை இல்லை ,திருமணத்தை முடிவு செய்ய உரிமையில்லை – என படிப்படியாக விளக்கினார்.

குழந்தை திருமணம், கோயில்களில் தேவதாசியாக ஆக்கிய கொடுமை, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற விதிகள்,தலைக்கற்பு, இடைக்கற்பு, கடைக்கற்பு, பதிவிரதை, விதவை என்ற சொற்களோ நிலையோ கட்டுப்பாடுகளோ ஆணுக்கு ஏன் இல்லை என்று ஆணித்தரமாகக் கேள்வி எழுப்பினார்.

ஸநாதனம் மனிதர்களை மனிதர்களாக நடத்தவில்லை. Dehumanise செய்தது. அந்த மனித மாண்பை மீட்டு Rehumanise செய்தவை பெரியார்-அம்பேத்கர் சிந்தனைகள். அந்தக் கொள்கைகளை பரப்புவதற்குத்தான் பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டம் செயல்படுகிறது என்று அடுக்கடுக்கான சிந்தனைகளை ஆசிரியர் எடுத்துரைக்க, வந்திருந்த பெண்கள் மிக ஆழமாகக் கேட்டனர்.

மேலும் விழாவின் சிறப்பிற்குக் காரணமான ஒவ்வொருவரையும் ஆசிரியர் தவறாமல் தன் உரையில் குறிப்பிட்டார். அரங்கில் பெண் களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருந் ததும், அதுபோல நிகழ்ச்சிக்கு உரையாற்ற அழைக்கப் பட்டவர்களில் பெண்கள் அதிகமாக இருந்தது பற்றியும் நாடாளுமன்ற உறப்பினர்கள் டாக்டர் மிஷேல் அரவிந்தராஜா , டாக்டர் கரினா கார்லேண்ட், ஜான் முலே ஆகியோரின் பங்கேற்பையும் பாராட்டினார். பன்னாட்டு மகளிர்நாள் என்பதற்கேற்ப நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெண்கள் இருவரும் ஆண் ஒருவரும் அழைக்கப்பட்டது சிறப்பு என்று சுட்டிக் காட்டினார்.

பாலைவனத்தில் ஒரு சோலை

சிந்தனை வட்டத்தைச் சே்ர்ந்த ரம்யா மனோகரன் உரையை பாலைவனத்தில் ஒரு சோலை போன்று பத்திரிக்கைத் துறையில் பெண்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். அத்துறையில் தனது அனுபவங்களை சிறப்பாக எடுத்துரைத்தார் என்றும், ரேணு கிருஷ்ணபாபு அவர்கள் திரைப்படங்களில் பெண்களின் நிலையை சிறந்த முறையில் வெளிப்படுத்தினார் என்றும் முஜிபுர் ரகுமான் அழுத்தமாக உரைத்த கருத்துகளையும் எடுத்துச் சொல்லி அவர்களை வாழ்த்தினார்.

சிறப்புக் கட்டுரை

தோழர் சுப்ரமணியம் அவர்களுக்குப் பாராட்டு

எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களின் கருத்தாழமிக்க உரையினையும் இந்த நிகழ்ச்சிக்கு அடித்தளமாக அவரது பங்களிப்பு இருந்தது என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார். இணைப்புரை யாற்றிய தோழர் ராதிகா ஆங்கிலத்திலும் தமிழிலும் அழகாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதைப் பாராட்டி இன்னும் பல ராதிகாக்கள் உருவாக வேண்டும் என்று கூறினார். , நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆங்கிலத்தில் சிறப்பாக அறிமுகப்படுத்திய தோழர் மிதுன்ராஜ் அவர்களது அற்புதமான ஆங்கிலத்திறனை குறிப்பிட்டுப் பாராட்டினார். ‘அருள்மொழிக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் எங்களால் வளர்க்கப்பட்டு சிறப்பாக செயலாற்றி வருகிறார். இங்கு பல அருள்மொழிகள் உருவாகி வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றும் கூறி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

 

சிறப்புக் கட்டுரை

தோழர் தாயுமானவனுக்குப் பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் சரவணன் இளங்கோவனுக்குப் பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் வசந்தனுக்குப் பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் இளையமதிக்குப் பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் திருமலை நம்பிக்குப் பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் அரங்க மூர்த்திக்கு பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் ராதிகாவிற்குப் பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் சுரேஷுக்குப் பாராட்டு

சிறப்புக் கட்டுரை

தோழர் நந்தகுமாருக்குப் பாராட்டு

ஆசிரியர் உரை முடிந்ததும் அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று நீண்ட நேரம் கரவொலி எழுப்பினர்.

மெல்பேர்ன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர் அரங்க மூர்த்தி மற்றும் தாயுமானவன் பாஸ்கரனார் ஆகியோருக்கு சிறப்பு செய்ததும், தோழர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் சால்வை அணிவித்துப் பாராட்டி வாழ்த்து கூறியதும் அரங்கில் இருந்த அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இறுதியாக பெரியார்-அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

சுரேஷ் அவர்களும் ஜான் முலே வைப் போல மிக உயரமானவர். அவருக்கும் ஆசிரியர் சால்வை அணிவிக்கும் போது குனியாதீர்கள் : என்று சொல்லி நிமிர்ந்து நிற்கச் செய்து சால்வை அணிவித்தார்.

‘பெரியார் உலகம்’
ஆவணப் படம்

மெல்பேர்ன் நிகழ்ச்சிக்கு இடையில் தமிழ்நாடு சிறுகனூரில் அமைய இருக்கும் பெரியார் உலகம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டது.

நிகழ்வின் முடிவில் சிட்னியிலும் பிரிஸ்பேனிலும் நடந்ததைப்போல இருமொழிக் கல்விக்கு ஆதரவாகவும் மும்மொழித் திணிப்பை எதிர்த்தும் மெல்பேர்ன் தோழர்கள் முழக்கம் எழுப்பினார்கள்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. நெடுந்தூரம் செல்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் அவர்கள் கையில் எடுத்துச்செல்லுமாறு வசதியாக பைகளில் வைத்துக் கொடுக்கப்பட்டன.

மன நிறைவாக முடிந்த மெல்பேர்ன் கூட்டம் நடந்தநாள் சனிக்கிழமை ஆகும். பிறகென்ன? கடைசித் தேர்வை முடித்த மாணவர்கள் போல நாளை நல்ல ஓய்வுதானே என்று நினைக்கத் தோன்றும். ஆனால் மறுநாள் இன்னும் அதிக நிகழ்ச்சிகள். காலையில் 9 மணி அளவில் மெல்பேர்ன் தெற்கு நரேவாரனில் உள்ள தோழர்கள் சாந்தி-சிவா ஆகியோரின் இல்லத்தில் ஒரு சிறு நூலக வாசகர் வட்ட சந்திப்பு. ஆசிரியரும் நானும் எழுத்தாளர் முத்துகிருஷ்ணனும் அங்கு கூடியிருந்த தமிழ்நாட்டுக் குடும்பத்தினருடன் சற்று நேரம் உரையாடினோம். சாந்தியினுடைய தாயார் ஆசிரியரை வரவேற்று தங்கள் குடும்பம் பற்றி செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவரிடம் தமிழ்நாட்டில் சமணர்கள் வாழ்க்கை பற்றியும் அவரது தந்தையாரைப் பற்றியும் திராவிடர்கழகத் தொடர்பு குறித்தும் ஆசிரியர் மிகுந்த அன்புடன் உரையாடினார்.

அடுத்து அரங்க மூர்த்தியின் இல்லத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டி. மெல்பேர்ன் தொலைக் காட்சிக்காக ராதிகா ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆசிரியரிடம் கேள்விகளைக் கேட்டார். பொருளாதாரம், உலக அரசியல், மதவாதம், வலதுசாரிப் போக்கு உள்ளிட்ட பல துறைகளைப் பற்றிய அறிவார்ந்த கேள்விகளுக்கு ஆசிரியர் அவர்கள் மிகச்சிறந்த விடைகளை அளித்தார். அதன்  பிறகு அதே தொலைக்காட்சிக்காக என்னிடம் எழுத்தாளர் முத்து கிருஷ்ணன் அவர்கள் பேட்டி எடுத்தார்.

சிறிது நேர மதிய ஓய்விற்காக ஆசிரியர் அறைக்குச் சென்றார். அதற்கு முன்பாக ‘அய்யா நீங்கள் எழுந்த உடன் கொஞ்சம் மெல்பேர்ன் நகரத்தை சுற்றிப் பார்க்கலாமா?’ என்று தோழர் மூர்த்தி ஆசிரியரிடம் கேட்டார். ஆசிரியர் சிரித்துக்கொண்டே “பார்க்கலாமே! நாங்களும் மெல்பேர்னை சுற்றிப் பார்த்தோம் என்று சொல்லிக் கொள்ள வேண்டாமா?“ என்றார்.

 (தொடரும்)

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *