எந்த ஆதிக்கத்திற்கும் அடிபணியாத ஒரு நிலம், அந்த நிலம்சார் இனம், அந்த இனமக்களின் சிந்தனைகளில் நிறைந்து நிற்கும் பாசிச எதிர்ப்பு கோட்பாடு, சமத்துவ அரசியல், தனித்துவமான பண்பாடு என்பது எந்த ஒரு இனத்திற்கும் இல்லாதது.
வள்ளுவம் தொட்டு இந்த மக்களின மனதில் அற சிந்தனைகளை விதைத்து, அதற்கு எதிரான வர்ணா சிரம, தர்ம சாஸ்திர கோட்பாடுகளையும் கேள்வி கேட்டு ஓட, ஓட விரட்டிய மக்கள் திரள் நாம்.
நமது அறம் சமத்துவத்திற்கான பாதை. இந்த இயல்பான அற சிந்தனை மக்கள் ஒடுக்கப்படும் போதும், மதத்தின் பெயரால் பிரிவினைக்கு உட்படும்போதும், ஜாதிய சதியால் தூண்டப்படும் போதும், கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு அரசே துணை நிற்கும் போதும், அறச்சீற்றமாக மாறுகிறது. காரணம் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பா.ஜ.க அரசு.
தமிழ்மக்களின் மனிதில் கனன்று கொண்டிருக்கும் இந்த ஆதிக்கஎதிர்ப்பு நெருப்பை இந்திய ஒன்றியம் முழுவதும் கடத்த வேண்டிய தேவையும், இக் கட்டான சூழலும் இன்று உள்ளது. அடிமைப்பட்ட இந்திய மக்களை மீட்கும் தத்துவம் இந்திய ஒன்றியத்தின் கடைக்கோடி தமிழர் வசம் உள்ளது.
அந்த தத்துவம் தான் இந்த தமிழ் மண்ணை உயிரூட்டியது. இம்மக்களின் வாழ்வும், அறிவும் செழிக்க உதவியது.அது தான் “திராவிடக் கொள்கை “.அந்த திராவிடத்தை இந்தியத்திற்கு கடத்துவோம்.
சமூக நீதி என்பதே திராவிடம் தான்…
இந்த சமூகத்தின் அநீதி பார்ப்பனியம் தான்…அந்த தந்திர பார்ப்பனியம் இன்றைக்கு தன் வடிவத்தை மாற்றியுள்ளது.கொடூர நீட் வடிவிலோ, மனுதர்ம (விஸ்வ கர்மா) யோஜனா என்ற பெயரிலோ ,புதிய கல்விக்கொள்கை என்றோ வலுவற்ற இந்திய மக்களின் கல்வி தொட்டு அனைத்து வாழ்வாதாரங் களையும் பறிக்கிறது.
திராவிடத்தை இந்தியத்திற்கு கடத்துவோம்
திராவிடம் *ஆரியம் – அது தான் இந்தியம்
இந்திய புவியியல் அமைப்பின் தட்பவெப்ப சூழல் உயிர்களின் தோற்றத்திற்கும், பெருக்கத்திற்கும், பரிமாணம் அடையவும் ஏற்றது.இந்த சூழல் தான் முதல் மனித இனத்தின் வித்திற்கு உயிர் கொடுத்தது. அப்படி அமைந்த ஆதி இனங்களில் ஒன்று தான் திராவிட இனம்.
இந்திய வரலாற்றை வேதங்களின் காலத்தில் இருந்து தான் பெரும்பான்மை வரலாற்று ஆசிரி யர்கள் தொடங்குகிறார்கள்… ஆனால், தொகுக்கப் பட்டவேதநூல்களில் பழைமையான ‘’ரிக்’’ வேதத்தில் ,தேவர்களின் தலைவனாகிய ‘’இந்திரன்’’ அவர்கள் நுழைந்த பகுதியில் இருந்த நகரங்கள்,கோட்டைகளை அழித்ததற்காக அவனை புகழ்ந்து பாடும் பாடல்கள் உள்ளன.
நகரம், கோட்டை, கொத்தளங்களுடன் இந்தி யாவில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த நாகரீகம் கி.மு.2000 ஆண்டுக்கு ஒட்டியதாக இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சி மூலம் பஞ்சாப் பகுதியில் கண்டெ டுக்கப்பட்டது.
உலகில் உள்ள நாகரீகங்களில் மூத்ததான அந்த நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம்;அது திராவிட நாகரீகமாக இருக்கலாம் என்றும் அங்கு கிடைத்த எழுத்துக்கள் பழைய தமிழ் மொழி எழுத்துக்களாக இருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது…இந்த நாகரீ கத்தின் அழிவுகள் ஏதோ ஒரு காட்டுமிராண்டி கூட்டத்தின் தாக்குதலால் விளைந்தது….அப்படி யெனில்,
அந்த காட்டுமிராண்டி கூட்டம் கைபர்- போலன் வழி இந்தியாவிற்குள் நுழைந்த கூட்டமா ???
இந்தியாவின் நாகரீகம் என்பதே திராவிட நாகரீகம் தானே???
திராவிட நாடு என்பதே இந்தியா முழுமைக்குமான நாடு தானே ?
இந்திய வரலாறு என்பது இந்திய திராவிட அசுர கூட்டத்தின் மீது ஆரியம் எழுதிய ஆரியத்தின் வெற்றி வரலாறு தானே???
இந்த கேள்விகள் இயல்பாக எழும் ..
சுருக்கமாக ,
தமிழ்* சமஸ்கிருதம்
ஆரியம்*திராவிடம்
அது தான் இந்தியம்
என்பதை இந்தத் தலைமுறை திராவிடம் அம்பலப்படுத்த வேண்டும்.
தென்னிந்தியா மட்டுமல்ல திரரவிட நாடு ; பரப்புரை செய்வோம்
இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரு இனம் அது திராவிடர் அல்லது அம்பேத்கர் கூற்றுப்படி நாகர்கள் – ஆனால் இந்தியா முழுமைக்கும், ஆரியத் திற்கு எதிரான இனம் என கொள்வோம்;
ஆரிய படைஎடுப்பு கைபர், போலன் கணவாய் வழி வருகிறது…அங்கே சிறு அளவில் திராவிடரோடு கலக்க ஆரம்பிக்கிறது…பின்னர் இன கலப்பு வட இந்தியா முழுமையும் வேகம் பெறுகிறது. [மேய்ச்சல் சமூகமாக வந்த ஆரியர்கள் வரும் போது பெண்களை அழைத்து வரவில்லை]
தென்னிந்தியா விந்திய மலை தாண்டி உள்ளது.தென்னிந்தியாவில் ஆரிய கலப்பு குறைந்து காண அந்த மலை தாண்டி வருதல் அன்றைக்கு கடின மானதாக இருந்து இருக்கும்,
அதுவும் தென்னிந்தியாவின் மற்றப் பகுதிகளை விட தமிழ்நாட்டில் திராவிடம் தனித்தன்மையுடன் இயங்க காரணம்
கலப்பு குறைவு
விரட்டப்பட்ட திராவிடர்களின் கடைசி எல்லை யாக தமிழ்நாடு இருந்து இருக்கலாம்..
வேதம் கூறி நிற்கும் கருப்பு நிறம் கொண்டோர் அனைவரும் திராவிடர் தான்…வேதத்தின் காலத்தை கணக்கில் கொண்டால் நடந்த சண்டை எல்லாம் வட இந்தியாவில் இருந்த திராவிடர்களிடம் தான்.
தென்னிந்தியா மட்டும் தான் திராவிடம் என கணக்கில் கொண்டால் தமிழின் அனைத்து கலைகள், இலக்கியம்,மருத்துவம் அனைத்தையும் விட்டுத் தர வேண்டும்.
எனவே ,இந்திய நாடு முழுமைக்கும் திராவி டத்தை எடுத்துச் செல்வோம். மக்களின் மனங்களில் கலந்து விட்ட ஆரிய பண்பாட்டை முறியடிப் போம்…. இந்திய மக்களின் தாழ்வுணர்ச்சியை நீக்குவோம்.வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்;
ஆதி இனங்களில் ஒன்றான திராவிடம் ஆரியத்தின் சூழ்ச்சி வலையில் மயங்கிக் கிடந்தது …சுருண்டு கிடந்த உணர்வற்ற இந்த கூட்டத்தை எழுப்ப குரல்கள் ஓங்கி எழத்தொடங்கின.. பிடியில் சிக்குண்ட இந்தியம் இன்றைக்கும் எழும்ப முடியாமல் தவிக்க … என்றைக்கும் ,எதற்கும், அடிபணியாத தமிழ்நாட்டில் இருந்து ஆரிய பார்ப்பனியத்திற்கு முதல் அடி, அதன் ஆட்டத்தை அடக்கும் முதல் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலித்தது – அது தான் திராவிடமாக இன்றும் தொடர்கிறது.
ஆசீவகம் ,பவுத்தம்,சமணம் , வைதீக பார்ப்பனிய மதங்கள் உட்பட அறுவகை மதங்கள் இந்திய மண்ணில் விளைந்தவை ..அதில் பவுத்தமும், சமணமும் ஆரியத்தின் வருண பாகுபாடு,வேள்வி முறை,அதில் விலங்குகளை இட்டு தின்னல் என்பவற்றை கேள்வி கேட்டவை.
ஆனால், தந்திர பார்ப்பனியமோ தன்னை வளர்க்க ,தன் கொள்கையை காக்க சொந்தக் கடவுளான பிரம்மனையே காவு கொடுத்தது…. சத்ரியனான விஷ்ணுவையும் சூத்திரனான சிவனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தன்னை பலப்படுத்தியது….பார்ப்பனியத்தை வெற்றிக் கொள்ள புறப்பட்ட பவுத்த, சமண மதங்களும் பார்ப்பனியத்தால் செரித்து உள்வாங்கப்பட்டன. அனைத்தையும் வெற்றி கொண்ட வைதீக பார்ப்பனிய மதம் இன்றைக்கு இந்தியாவின் “ஹிந்து மதம்’’ என்ற பெயருடன் உலா வருகிறது.
இந்திய சுகந்திரத்தை அய்ரோப்பிய வெள்ளை யரிடம் இருந்து வாங்கினாலும்
ஆரிய வெள்ளைக்காரர்கள் இன்றைக்கும் இதனை அறிவிக்கப்படாத “ஆரிய தேசமாகவே” உணருகின்றனர்.
ஆரியர்களின் கனவு தேசமான இந்த இந்திய தேசியத்தை ஹிந்து தேசியமாக்கியே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர் சிலர்.
ஆரியத்தால் என்ன பிரச்சினை உங்களுக்கு? என்று நீங்கள் கேட்கலாம்….
முற்றும் உதிராத இனக்குழு தன்மையின் மீது அது ஜாதியத்தை பூசியது….
வருணாசிரமத்தை தன் கொள்கையாக கொண்ட அது, இந்திய மனங்களில் “ஜாதி’’ எனும் கொடிய விஷக் கிருமியை பரப்பியது…
புத்தியில் விளைந்த கேடு
எந்த நிபந்தனையும் இன்றி ஒரு இந்தியன் தன்னை தாழ்த்தப்பட்டவனாகவும், சூத்திரனாகவும், சண்டாளனாகவும் உணர்கிறானே அது அவர்களின் மனுவால் இந்திய புத்தியில் விளைந்த கேடு ..
எந்த கேள்வியும் கேட்காமல்,அப்பன் தொழிலை மட்டும் பார் என்றானே;அடிமை வாழ்க்கை வாழ்ந் தார்களே நம் பாட்டன்கள் – அது தான் பார்ப் பனியத்தின் வெற்றி.
அது தான் மனுதர்ம (விஷ்வகர்மா) யோஜனா என்று திரும்ப வருகிறது.
எங்களுக்கும் வாழ்வு வேண்டும்.நாங்களும் சமூக நீதி பெற வேண்டும் என்று கேட்ட முதல் குரல்; ‘பார்ப்பனர் அல்லாதோர் நல சங்கம்’ அமைத்த துணிவு இந்தியாவிலே நம் சென்னை மாகாணத்திற்கு தான் இருந்தது….வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பேசிய ‘’நீதிக் கட்சி’’ நாடு சுகந்திரம் அடையும் முன்னரே ஆட்சி அதிகாரத்தை அடைந்தது.
பின்னர், பெரியார், அண்ணா, கலைஞர்,ஆசிரியர் வரிசையில் இன்றைக்கு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வரை ஸநா னத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் தலைவர்கள் இங்கு உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். இது தான் இம்மண்ணின் சிறப்பு.
பல பல படையெடுப்புகளுக்கு ஆளான வட இந்தியாவை பொறுத்தவரை ,இன்றைக்கும் அங்கு உள்ள பிரச்சினை ஹிந்து *முஸ்லீம் தான். இஸ்லாமிய மன்னர்கள் வட இந்தியாவில் அதிகம் ஆட்சி செய்ததின் எச்சமாக உள்ளது.அது தான் பார்ப்பனர் அல்லாத ஹிந்துக்களின் கண்ணை மறைப்பதாகவும் உள்ளது.இந்த நிலைப்பாடு பார்ப்பனர் * பார்ப்பனர் அல்லாதோர் என்ற நிலைப்பாடாக மாற வட இந்தியா இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்கக் கூடும். கடந்த ஒன்பதரை ஆண்டு கால பாசிச பாஜக அரசு தன் ஸநாதன திட்டம் அனைத்தையும் முடிந்த அளவு தந்திரமாக செயல்படுத்தி தான் யாருக்கான அரசு என்பதை நிரூபித்து விட்டது. இந்த சூழ்ச்சி புரியாத மக்கள் முதலைக் கண்ணீரில் மதி மயங்கிக் கிடக்கிறார்கள்.
2024இலும் இந்திய ஒன்றியம் இந்த பாசிசத்தின் கைக்குள் அமைந்தால் மீண்டும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி போன்றே அது இருக்கும். பாசிச பா.ஜ.க. அரசிற்கு நீதிமன்றங்கள் (உச்சிக் குடுமி மன்றங்கள்) இப்போது போல துணை நிற்கும். ஜாதியால் தாழ்ந்த, வர்க்க பின்புலம் இல்லாத மக்களை மீட்க வழியே இருக்காது. மீண்டுமொரு வர்ணாசிரம ஆட்சியாக அது அமையும்.
நம் முன்னர் உள்ள சவால்கள்
1. திராவிட தத்துவத்தை இந்தியம் முழுவதும் கடத்துவது.
2.இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை காக்க பெரியாரை இந்திய ஒன்றியம் முழுவதும் கொண்டு சேர்ப்பது.
3. பா.ஜ.க., தலைமையிலான ஆட்சி பெரும் பான்மை ஹிந்து மக்களுக்கும் “எதிரானது” எனப் புரிய வைப்பது.
4.மிஸீபீவீணீ உண்மையில் வெற்றிப் பெற வேண்டு மானால் காங்கிரஸ் தலைமையிலான மி.ழி.ஞி.மி.கி கூட் டணியை ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்த்துவது.
5. நரேந்திர தாமோதரதாஸ் அவர்கள் தலைமையிலான ஆட்சி எந்த அளவிற்கு எளிய மக்களுக்கு எதிரான ஆட்சியாகவும், கார்ப்பரேட்டிற்கான ஆட் சியாகவும் இருந்தது என்பதை பரப்புரை செய்வது.
6.அதற்கு ஆதரவாக இருந்த அ.தி.மு.கவின் உண்மையான கோர முகத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது.
இந்தியாவை அகண்ட “பாரத” கனவு கொண்ட ,தனக்கென இரகசிய அஜெண்டா கொண்ட ஒரு சிறு கூட்டத்தின் கைகளில் இனியாவது ஒப்படைக்காமல், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மையை காக்கும் மி.ழி.ஞி.மி.கி கூட்டணியின் கைகளில் வாக்குகளாக தருவோம்.
டாக்டர் கவுதமி தமிழரசன் எம்.டி.(எஸ்)
மேலமெஞ்ஞானபுரம்