செய்திச் சுருக்கம்

viduthalai
2 Min Read

அது முருகன் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு: அமைச்சர்

மதுரையில் நடக்க இருப்பது முருகன் மாநாடு அல்ல; சங்கிகள் மாநாடு என அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சித்துள்ளார். மக்களை பிளவுபடுத்தக் கூடிய ஆயுதமாக முருகன் மாநாட்டை சங்கிகள் நடத்துவதாகவும், தமிழிசையின் ஆலோசனையை கேட்டு செயல்பட வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வெறும் 300 பேருக்கு கல்வி ஊக்கத் தொகை கொடுத்துவிட்டு விஜய் தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதாகவும் சாடியுள்ளார்.

4.25 லட்சம் பேரின்
வேலை காலி..!

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிநீக்கங்கள், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரே ஆண்டில் 4.25 லட்சம் பேரின் வேலை பறிபோய் இருக்கிறது. .

பெண்கள் இந்த அவசர உதவி எண்களை தெரிந்துகொள்க!

பெண்களுக்கான வன்முறைகளை தடுக்க இந்திய அரசாங்கம் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படி இக்கட்டான சூழ்நிலை ஏதாவது ஏற்பட்டால், பெண்கள் உடனே இந்த எண்களுக்கு தொடர்புகொண்டு உதவி பெறலாம். குடும்பத்தை தவறாக வழிநடத்துதல் & குடும்ப வன்முறை: 181, காவல்: 100, பெண்களுக்கான அவசர உதவி எண்: 1091, பெண்களுக்கான தேசிய ஆணையம்: 112, பெண் குழந்தைகளுக்கான அவசர உதவி எண்: 1098.

12ஆவது தேர்ச்சி போதும்…
ஒன்றிய அரசில் 166 பணியிடங்கள்!

இந்திய விமான நிலையத்தில் இருக்கும் 166 உதவி பாதுகாவலர் (Assistant Security) பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. 21-27 வயதுக்குட்பட்ட +2 தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இணைய வழி தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். 3 ஆண்டு ஒப்பந்தப் பணியான இதற்கு ரூ.22,500 வரை ஊதியம் வழங்கப்படும். வரும் 9ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கனமழை வெள்ளத்துக்கு
ஒரே ஆண்டில் 3 ஆயிரம் பேர் பலி

செய்திச் சுருக்கம்

நாடு முழுவதும் ஒரே ஆண்டில் கனமழை வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றத்துக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை துறையிடம் உள்ள புள்ளி விவரத்தில், 2024-2025இல் 3,080 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 2013-2014ஆம் ஆண்டுக்கு (5,677 பேர் பலி) பிறகு இதுவே அதிகம் என்றும், 2023-2024 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக 498 பேருக்கு கரோனா.. 8 பேர் மரணம்!

நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் புதிதாக 498 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மேற்கு வங்கம், கேரளா, கருநாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் புதிதாக 8 பேர் உட்பட 221 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரியம் இல்லாத கரோனா என விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், பலி அதிகரிப்பதால் மீண்டும் லாக்டவுனா? என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *