கடந்த இரு ஆண்டுகளில் சென்னையில் 19.70 விழுக்காடு விபத்து உயிரிழப்பு குறைவு – போக்குவரத்து காவல்துறை தகவல்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 25– சென்னையில் உயிரிழப்பு விபத்து வழக்குகள் மற்றும், இறப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளன. இது தொடர்பாக, சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சாலை விபத்துகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்பு களை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP) தொடர்ந்து செயல்பட்டு வரு கிறது. இதனை அடைய, கடுமை யான விதிகள் அமலாக்கம் மற்றும் முறையான போக்குவரத்து ஒழுங்கு முறை மூலம் முயற்சிக்கிறது. அமலாக் கம் மற்றும் ஒழுங்கு முறை தவிர, சாலைப் பயனாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விழிப் புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏனெனில் விபத்துகளைத் தடுப்பது ஒன்றிணைந்த பொறுப்பு என்பதால்,எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல் களைப் பின்பற்றவும், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்றுக்கொள்ளவும் மக்களை வலியுறுத்துகிறது.

மேலும், விபத்துகளைத் தடுக்க, பயனுள்ள மற்றும் திறமையான அமலாக்கத்துக்காக பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளை கையாண்டு வருகிறது.

சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதற்கு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை மேற்கொண்டு வந்த நடவடிக் கைகள் வெற்றியடைந்துள்ளது – ஆண்டுவாரியாக விபத்துகள் குறைந்த விவரத்தின் மூலம் தெளி வாகிறது.

2021ஆ-ம் ஆண்டு, (304 A) சட்டப் பிரிவின் கீழ் 265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 269ஆக இருந்தது. 2022ஆ-ம் ஆண்டு, (304 A) சட்டப்பிரிவின் கீழ் 238 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது.

இந்த ஆண்டில் உயிரிழப்பு களின் எண்ணிக்கை 240ஆகவும், 2023ஆ-ம் ஆண்டில், (20.06.2023 வரை) 214 வழக்குகள் (304 A) சட்டப் பிரிவின் கீழ் பதிவு செய்யப் பட்டுள்ளது, விபத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 216ஆக குறைந்துள்ளது.

மேலும்,சாலைப் போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் (iRAD) 

 மூலம் GIS (Geographic Information System)  வரைபடத்தைப் பயன்படுத்தி சென்னை நகரம் முழுவதும் 104 விபத்து தடங்களை GCTP கண்டறிந்து, சாலை உள்கட்டமைப்புகளை ரூ. 1 கோடி செலவில் மேம்படுத்தியுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *