நம் வீட்டில் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நிறைந்துள்ள இடம் சமைய லறை தானாம். ஆம், பாத்திரம் துலக்க பயன்படுத்தும் ஸ்பான்ஜில் தான் அதிக எண்ணிக்கையில் கிருமிகள் உள்ள வாம். இதற்கு அடுத்து சமையல் அறையில் கழுவுமிடம், டூத் பிரஷ் மற்றும் அதன் அடுக்குமிடம், ரிமோட் கன்ட்ரோல், கீபோர்ட், காஃபி மேக்கர், குளியலறை அலமாரி, துடைக்கும் துண்டுகள், மிதியடிகள் மற்றும் கதவுகளின் கைப்பிடிகளில் கிருமிகள் நிறைந்துள்ளனவாம்.