நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தை பெரியார் வி.பி.கலைராஜன்

Viduthalai
3 Min Read

மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனை யாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாக தொடர்ந்து வாழ்கின்றன.  தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனை கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா,  கலைஞர், முதல்வர்  ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சாதி ஒழிப்பு –  ஒரு புரட்சிகர முயற்சி

1927இலேயே தந்தை பெரியார் தனது பெயருக்குப் பின்னால் ‘நாயக்கர்’ என்ற  சாதிப் பெயரைப் போடுவதை நிறுத்தினார். 1929 பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல் பட்டில் நடந்த சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாட்டில், பெயருக்குப் பின்னால் சாதிப் பட்டம் போடக்கூடாது என்ற முக்கிய மான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று இந்தியாவில் ஒருவர் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரைப் போடாத அல்லது; போடுவதற்கு கூசுகிற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டுமே. இது பெரியார் மண்ணின் சிறப்பு.

பெண்ணுரிமை மற்றும் சமத்துவம்

தந்தை பெரியார் பெண்களின் உரிமைக்காகப் போராடினார். இன்று அவரது கொள்கைகளின் தொடர்ச்சியாக, முதல்வர் ஸ்டாலின் பெண்களையும் அர்ச்சகர்களாக்கி, பலரை ஓதுவார்களாக மாற்றி, உண்மையான சமத்துவத்தை நிலைநாட்டியுள்ளார் என்றால் மிகையல்ல. மதரீதியான சீர்திருத்தங்கள் 1928 முதல் பெரியார் பகுத்தறிவு வாதியாக மாறினார். அவர் எதிர்த்தது மூட நம்பிக்கைகளையும், சமூக அநீதிகளை யும்தான். இன்றும் அந்தக் கொள்கைகள்  தொடர்கின்றன. பெரியாரின் பன்முக ஆளுமை தந்தை பெரியாருக்குப் பிறந்த பெண் குழந்தை ஐந்து மாதத்தில் இறந்து போனது. ஆனால் அவர் தனது சொந்த  வருத்தத்தை சமூகப் பணியில் மாற்றினார்.  இன்று லட்சக்கணக்கான சிந்தனைப்  பிள்ளைகள் அவருக்கு இருக்கிறார்கள்.  கலைஞர், பெரியாரின் பெயரில் உருவாக்கிய சமத்துவபுரங்கள், ஜாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக வாழும் சமூகத்தின் சிறந்த உதாரணங்கள். இன்று தமிழ்நாட்டில் சமத்துவபுரம் இல்லாத ஊரே இல்லை.

மொழிப் பெருமை

இன்று ஒன்றிய அரசு பல திட்டங் களுக்கு இந்தி பெயர்களை வைத்து, மொழித் திணிப்பை நடத்துகிறது. வந்தே பாரத், சம்க்ர சிக்சா அபியான் போன்ற பெயர்கள் இதற்கு எடுத்துக்காட்டு. இதை எதிர்த்து நிற்கும் தமிழ்நாட்டின் நிலைப்பாடு பெரியாரின் மொழிப் பற்றின் தொடர்ச்சி.  இன்றைய இந்தியாவில் கர்னல் சோபியா குரோஷியா, வியோமிகா சிங் போன்ற வீராங்கனைகள் நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை ஜாதி, மத அடிப்படையில் பாகுபடுத்தும் ஆதிக்க சக்திகளின் மனோபாவம் பெரியார் எதிர்த்த சமூக அநீதிகளின் தொடர்ச்சிதான்.

நம்பிக்கையின் ஆதாரம்

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகியவற்றை தொடர்ந்து பாதுகாக்க பல வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தந்தை பெரியார் மீண்டும் பிறக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் – அவரது சிந்தனைகள் ஏற்ெகனவே அவரது அறிவுப் பிள்ளைகள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.  இப்படிப்பட்ட பெரியாரைத்தான் ஜாதிய அடையாளத்தால் சிறுமைப்படுத்த முயற்சிக்கிறது பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு. மே 25 அன்று ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் நிலைத் தேர்வில், “சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்?” என்று வினா கேட்கப்பட்டு; அதற்கு விடை யாக பெரியார் பெயருடன் அவருடைய சாதிப் பெயரையும் சேர்த்து அச்சிட்டுள்ள னர். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தனது பெயரின் பின்னால் இருந்த ஜாதியை தூக்கியெறிந்தவர்; வாழ்நாள் எல்லாம் ஜாதி ஒழிப்பிற்காகவே போராடியவர்; சமத்துவத்திற்காக சிந்தித்து சிந்தித்து வழிகளைத் தேடியவர் பெரியார். அத்தகைய பெரியாரை இழிவுபடுத்தும் நோக்கத்துடன்தான் இத்தகைய விடையை அரசுப்பணியாளர்  தேர்வாணையத்தின் மூலமாக ஒன்றிய அரசு எழுதியது. எத்தனை முயற்சி செய்தாலும் ஜாதியத்திற்கு எதிரான பெரியாரின் சிந்தனை யை உங்களால் என்ன செய்துவிட முடியும்?

நன்றி: ‘தீக்கதிர்’ 5.6.2025

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *