ஒற்றைப் பத்தி

2 Min Read

வெ(ற்)றியா?

அய்.பி.எல். கிரிக்கெட் ஆண்டு தோறும் நடக்கிறது. பெரு முதலாளிகளின் பண விளையாட்டு.

கிரிக்கெட்டில் சூதாட்டத் திற்குப் பஞ்சமில்லை. அய்.பி.எல். கிரிக்கெட் விளையாட்டை மைதானத்தில் நேரில் பார்க்க கள்ள டிக்கெட் வியாபாரம் வெகு ஜோர்! ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து கள்ளத்தனமாக டிக்கெட்டை வாங்கி மைதா னத்தில் சென்று பார்க்க வேண்டும் என்ற உச்சக் கட்ட வெறி – அப்படி உந்தித் தள்ளுகிறது.

கிரிக்கெட் வீரர்கள் வெட்டிப் புரட்டுவதற்குக் கொட்டும் பண மழையைக் கேட்டால் மூர்ச்சை அடைந்து விடுவோம்.

இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம், விளையாட்டு வீரர்களை பல்வேறு விதமாக தரம் பிரித்துள்ளது.

அதன் அடிப்படையில் ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஏழு கோடி (ஏ+ – கிரேடு); ஒரு நாள் போட்டிக்கு ரூபாய்  6 லட்சம். விளையாடாமல் வெளியில் உட்கார்ந்திருந்தாலும், அணியில் இருந்தாலும் சம்பளம் உறுதி!

மற்ற விளையாட்டுகளை விட இந்தக் கிரிக்கெட் என்பது உயர்  ஜாதிக்காரர்களின் விளையாட்டு. இதுகுறித்து ஒரு திரைப்படமே கூட ெவளி வந்தது. (ஜீவா) முதுகில் பூணூல் இருக்கிறதா என்று தடவிப் பார்த்து அணியில் சேர்க்கும் காட்சி!

ஊடகங்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில் சுருண்டு கிடப்பதால் இனவுணர்வோடு இந்த விளையாட்டுக்குப் பெரும் விளம்பர வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றனர்.

இதனால் வெறி ஊட்டப் படும் இளைஞர்கள் உயிரை விடும் அளவுக்கு நேற்று ஒரு நிகழ்ச்சி!

அய்.பி.எல் இறுதிப் போட்டி நேற்று  முதல் நாள் அலகாபாத்தி்ல் நடந்தது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்.சி.பி. (Royal Challengers Bangaluru)  அணி வெற்றி பெற்றது.

அந்த அணியினருக்கு பெங்களூருவில் மிகப் பெரிய வரவேற்பும், பேரணியும்  நேற்று  (4.6.2025) நடத்தப் பட்டது. வெறிபிடித்த ரசிகர்கள் பெரும் அளவுக்குக் கூடியதால், கூட்ட நெரிசலில் 11 பேர் உயிர் இழந்தனர் என்பது எத்தகைய விபரீதம் – வேதனை!

வெற்றி வெறியாகலாமா? ஒரு விளையாட்டுக்காக விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பலியாகலாமா?

விளையாட்டை வெறும் விளையாட்டாகப் பார்க்காமல் ரசனை வெறியாக மாறலாமா?

என்னதான் பார்ப்பனர் ஆதிக்கப் புரியாகக் கிரிக்கெட் இருந்தாலும் உலகக் கோப்பையை இந்தியா வென்றது கபில்தேவ், எம்.எஸ். தோனி என்ற பார்ப்பனரல்லாத வீரர்கள் அணிக்குத் தலைமை வகித்தபோதுதான்!

– மயிலாடன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *