சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைமீதான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை (30 ஆண்டுகளுக்கு) அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
பெண்களைப் பாலுறவு பண்டமாகக் கருதும் ஈன மனிதர்களுக்கு இது ஓர் எச்சரிக்கையளிக்கும் தீர்ப்பாகும். தண்டனை அளித்த நீதிபதிக்கும், வழக்கை விரைவாக நடத்தி முடித்து குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்த காவல்துறைக்கும், அரசு வழக்குரைஞர்களுக்கும் நமது பாராட்டுகள்!
– கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
2.6.2025