தொடக்க கால முதல் திருச்சி மாநகரில் தி.மு.க.வைக் கட்டி வளர்த்ததில் பெரும் பங்கு வகித்த அருமைத் தோழர், ஒருங்கிணைந்த திருச்சி மாநகர தி.மு.க.வின் மேனாள் செயலாளர் தோழர், கே.கே.எம்.தங்கராசு அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
நமது கல்வி நிறுவனங்களுக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்த அருமை நண்பர்.
கொள்கைத் தெளிவும், சளைக்கா உழைப்பும் கொண்ட தோழரின் மறைவு தி.மு.க.வுக்கு குறிப்பிடத்தக்க இழப்பாகும்.
அவர் பிரிவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.6.2025
குறிப்பு: அவருடைய குடும்பத்தினருக்கு கழகத் தலைவர் தொலைபேசியில் ஆறுதல் கூறினார்.