‘‘ஏடு கொண்டல வாடு எங்கே போனான்?’’

1 Min Read

முன்பு, கரோனா தொற்று காலகட்டத்தில், வடநாட்டில், கடவுள்கள் சிலைகளை ‘போர்த்தி’ வைத்திருந்தார்கள். இன்றைக்கு ஒரு செய்தி வெளி வந்திருக்கிறது. நம்முடைய கொள்கை எவ்வளவு நியாயமானது என்பதற்கு அடையாளம் – திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஒரு வேண்டுகோள் விடப்பட்டு இருக்கிறது.
என்ன அந்த வேண்டுகோள் என்றால்,
‘‘திருப்பதி கோவிலுக்கு மேலே விமானங்கள் பறக்கின்றன; அது எங்களுக்கெல்லாம் அச்சத்தை உருவாக்குகிறது. ஆகவே, அதற்குரிய வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் அரசாங்கம் செய்யவேண்டும்’’ என்பதுதான்.
‘‘ஏடு கொண்டல வாடுவால் முடியாத விஷயமா’’ அது? ‘‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்.’’
‘‘தீராத வினையைத் தீர்த்து வைப்பவன்’’ கோவிலின் மேல் விமானம் பறக்காமலிருக்க அரசாங்கத்திற்கு ஏன் அப்பளிகேசன் போடவேண்டும்?
அதேபோன்று, இராமநாதபுரம் கோவில் – பாகிஸ்தானுடன் யுத்தம் என்றவுடன், எல்லா கோவில்களுக்கும் பாதுகாப்பு.
கடவுளை நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற அவசியம்!
கடவுள், நம்மைக் காப்பாற்றுவான் என்று நினைத்த காலம் மாறி, கடவுளை நாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற அவசியம் வந்தது என்றால், அதிலிருந்து என்ன தெரிகிறது?
‘‘கடவுளை மற, மனிதனை நினை’’ என்பதுதான்.
‘‘முதலமைச்சரை நினை, காவல்துறையை நினை’’ என்பதுதான்.
தனி மனிதர்கள் கேட்பதில்லையா? எனக்குப் பாதுகாப்பு வேண்டும்; எனக்குப் பயமாக இருக்கிறது என்று. அதுபோன்று, இப்போது கடவுளுக்கே பாது காப்பு கேட்கவேண்டிய அளவிற்கு வந்திருக்கிறது.
இப்படி இருக்கையில், கடவுளை நம்புகிறார்கள்; கோவிலுக்குக் கூட்டம் அதிகம் வருகிறது என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *