சேலம், மேட்டூர் , ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகக் குடும்பங்களின் கலந்துறவாடல்

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சேலம், ஜூன் 1– சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்கள் இணைந்து நடத்திய கொள்கை குடும்பங்களின் கலந்து றவாடல் விழா, 27/5/2025 அன்று, சேலம் சித்தர் கோவில் அருகில் நாயக்கம்பட்டி பொறியாளர் பா.அன்புமணி கோ. பாபு அவர்களின் பண்ணை தோட்டத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் இந்த விழாவிற்கு வந்திருந்து தலைமை பொறுப்பேற்று நிகழ்வினை பெருமைப்படுத்தினார்..

நிகழ்வின் முதல் நிகழ்வாக பகுத் தறிவு இசைக் கச்சேரி நடைபெற்றது. பகுத்தறிவு இசைப் பாடகர் சேலம் அமல்ராஜ் தங்களுடைய இசை குழுவினரோடு மிகச் சிறப்பான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து தலைமை பொறுப்பேற்ற வீ.அன்புராஜ் தன்னுடைய தனது உரையில், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் இதுபோன்ற குடும்ப சந்திப்புகளையும் கலந்துறவாடல் நிகழ்வுகளையும் தான் மிகுந்த உற்சாகத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்கிறார்…

இன்றைக்கு இங்கே நாங்கள் பொறுப்பாளர்கள் அண்ணன் ஊமை ஜெயராமன் போன்றவர்கள் எல்லாம் பேசுவதை காட்டிலும், இங்கே வந்திருக்கின்ற மகளிர் தோழர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் எங்களோடு கலந்து பேச வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையாக இருக்கிறது என்றும்,

இதுபோன்ற நிகழ்வுகள் தான் குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கும் மகளிர் தோழர்களுக்கும் மாணவ சமூகத்திற்கும் திராவிடர் கழகம் என்றால் என்ன,

அந்த இயக்கத்தின் கொள்கைகள் என்ன, தந்தை பெரியாரைப் பற்றியும், தமிழர் தலைவர் அவர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது என்றும் உரையாற்றினார்.

இந்த நிகழ்வை இவ்வளவு சிறப்பாக நடத்திய மூன்று கழக மாவட்ட பொறுப்பாளர் தோழர்களுக்கும், வருகை தந்து சிறப்பித்த குடும்ப தோழர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் பெரியார் பிஞ்சுகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

திராவிட கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி நிகழ்வை பாராட்டி மிகச் சிறப்பானதொரு வாழ்த்துரையை வழங்கினார்.

விளையாட்டுப் போட்டிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்ற அதே நேரத்தில்,  மாணவ மாண வியர்களுக்கும் தோழர்களுக்கும், தந்தை பெரியார் வினாடி வினா போட்டி, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி அவர்களால் நடத்தப்பட்டது.

வருகை புரிந்திருந்த மாணவ மாணவிகளுக்கும் இளை ஞர்களுக்கும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு 40 முதல் பரிசுகள், 40 இரண்டாம் பரிசுகள், 40 மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.

திராவிடர் கழகம்

நவீன தொழில்நுட்பத்தின் அடையாளமான செயற்கை நுண் ணறிவு குறித்து பொதுச்செயலாளர் வீஅன்புராஜ் மற்றும் சென்னையில் இருந்து வருகை புரிந்து இருந்த ரோபோடிக் பொறியாளர் பிரதீப் வகுப்பு எடுத்தனர்.

மகளிர்க்கு “கட்டத்தில் நிற்றல்” போட்டி நடத்தப்பட்டது. அவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது..

போட்டியில் வெற்றி பெற்று பரிசு பெற்றோர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் உருவம் பொறித்த பட்டயம் பொதுச் செயலாளர் அவர்களால் அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

சேலம் ஆத்தூர் மேட்டூர் கழக மாவட்ட பகுதிகளைச் சார்ந்த பெரியார் பெருந்தொண்டர்களுக்கு கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் உருவப்படம் பொறித்த பட்டயம் அணிவித்து சிறப்பு செய்தார்.

பழனி புள்ளையண்ணன், கவிஞர் சிந்தாமணியூர் சுப்பிர மணியன், ஆத்தூர் அண்ணாதுரை, கல்பாறைப்பட்டி கோவிந்தராஜு அம்மாபேட்டை சு.மல்லிகா, அம்மாபேட்டை சந்திரமோகன் ராஜூ, எடப்பாடி அம்மா அறிவுமணி, சேலம் பேங்க் ராஜு, மேட்டூர் சோமசுந்தரம், சேலம்  பி.ஏ.சுப்பிரமணி,  சேலம் வழக்குரைஞர் சோ அசோகன், அஞ்சாநெஞ்சன் ஆத்தூர் ஜெயராமன் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.

விடுதலை சந்தா வழங்கல்

தாதகா பட்டி பகுதி தலைவர் மூணாங் கரடு சரவணன் குடும்பத் தின் இணையர்கள் பா. காயத்திரி சந்தோஷ் ஆகியோர் தங்கள் இணையேற்பு மகிழ்வில் நினைவாக விடுதலை ஒரு ஆண்டு சந்தா பொதுச் செயலாளரிடம் வழங்கினர்.

கழகத்தின் பொதுச்செயலாளர், சேலம் மேட்டூர் ஆத்தூர் கழக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், காப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழகம், மகளிர் அணி மகளிர் பாசறை, இளைஞர் அணி, மாணவர் அணி அனைவருக்கும், மற்றும் நிகழ்வில் வெற்றிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பயனாடை அணிவித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இறுதியாக ஒலி, ஒளி, அமைத்து தந்த பணிபுரிந்த தோழர்கள் எட்டு பேருக்கும் குடும்ப நிகழ்வில் உணவு செய்து பரிமாறிய தோழர்கள் அய்ந்து பேருக்கும் ஆதி குடியிசை வாசித்த தோழர்கள் ஏழு பேருக்கும் பகுத்தறிவு இசைக் கச்சேரி நடத்திய தோழர்கள் மூவருக்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பயனாடை அணிவித்து பெருமைப்படுத்தினார்.

நிகழ்விற்கு சிறப்பாக வந்திருந்து பெருமைப்படுத்திய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீஅன்புராஜ் அவர்களுக்கு ,மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, சேலம் ஆத்தூர் மேட்டூர் கழக மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் அணி மகளிர் பாசறை தோழர்கள் மற்றும் நம் இயக்க குடும்பத்திலிருந்து வந்த மகளிர் தோழர்கள் என அனைவரும் இணைந்து சிறப்பு செய்தனர்.

நிகழ்வின் தனிச்சிறப்பாக 106 மகளிர் தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *