திருப்பதி, ஜூன் 26 திருப்பதியில் பெற்றோரோடு நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது சிறுவனை காட்டிலிருந்து வெளியேவந்த சிறுத்தை ஒன்று தூக்கிக் கொண்டு ஓடியது, பெற்றோரும் உடன் சென்ற வர்களும் கூச்சலிட்டதால் சிறுத்தை அந்தச் சிறுவனை சிறிது தூரம் இழுத்துச் சென்று கீழே போட்டு விட்டு ஓடிவிட்டது. சிறுவனை சிறுத்தை கழுத்தில் கவ்வி இழுத்த தால் முகம் மற்றும் கழுத்துப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட் டுள்ளது. சிறுவனை உடனடியாக அடிவாரத்திற்குக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கழுத்து மற்றும் தாடை பகுதியில் சிறுத்தையின் பல் மற்றும் நகம் பட்டு சதை மற்றும் ரத்த நாளங்கள் சிதைந்துள்ளதால் சிறுவன் அபாய கட்டத்தில் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளான்.
பெற்றோர் நடந்துவந்து தலைமுடியை காணிக்கையாக கொடுப்பதாக வேண்டிக் கொண்டு திருப்பதிக்குச் சென்ற சமயம் இந்தத் துயர நிகழ்வு நடந்துள்ளது.
‘‘கடவுளை நம்பியோர் கைவிடப்படார்” என்று ஜம்பம் காட்டும் பக்தி வியாபாரிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?