கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.5.2025

viduthalai
2 Min Read

 

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளை பரப்பி, பொய்ச் செய்திகளை பூதாகரமாக்கி தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. அவற்றை உதாசீனப்படுத்தி பணியாற்றுங்கள், என திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்.

* நகை கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு தளர்வு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தலைவர்கள் வரவேற்பு.

தி இந்து:

* இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவீதமாக ஆக சரிவு  4 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி!

* அலிகார் முஸ்லிம் மற்றும் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகங்களில் ஓபிசி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளதா? ஆராய்ந்திட ஓபிசி நாடாளுமன்ற குழு முடிவு.

* மோடி ஆட்சியில் இதுவரை ரூ.6.36 லட்சம் கோடி மோசடி: பிரதமர் மோடி தலைமையிலான அரசில் வங்கி மோசடிகள் 416 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.

* மோடியின் டபுள் என்ஜின் சர்க்கார் சாதனை? அரியானா மாநிலம்  நூஹ் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களின் இடைநிற்றல் 45 விகிதமாக ஆகியுள்ளது. மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மாநில வாரிய தேர்வு முடிவுகளில் அரியானாவின்  நூஹ் மாவட்டம் மிகக் குறைந்த இடத்தில் உள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘நீட்பிஜி 2025அய் ஒரே ஷிப்டில் நடத்துங்கள்’: இரண்டு ஷிப்டுகள் தன்னிச்சையானது என  உச்ச நீதிமன்றம் உத்தரவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உத்தரகாண்ட்: அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் மேனாள் பாஜக அமைச்சரின் மகன் மற்றும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

* ‘நகைக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதித் திருக்கும் கட்டுப்பாடு கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது” என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.

தி டெலிகிராப்:

* ஒடிசாவை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.5 கோடி லஞ்சம்: அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் சிந்தன் ரகுவன்சியை கைது செய்தது சிபிஅய்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சென்னையில் இருந்து செல்லும் பிரபலமான வந்தே பாரத் ரயில்கள் மெனுவிலிருந்து அசைவ காலை உணவு நீக்கம். பயணிகள் அதிர்ச்சி.

* “எளிமை ஆளுமை” (SIMPLEGOV) திட்டத்தின் கீழ் சான்றிதழ்கள், என்ஓசி உள்ளிட்ட 10 அரசு சேவைகளை எளிமையாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக இணைய வழிச் சேவை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு.

– குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *