பீகார் மாநிலத்தில் மோடி ரோடுஷோ நடத்தினார். இதற்காகவே பல கோடிகள் செலவு செய்து சாலைகள் செப்பனிடப்பட்டதாக பீகார் மாநிலத்தில் இருந்து வெளிவரும் யு டூயூப் செய்தி சேனல்களான பீகார் கி புத்ர, நேசனல் தஸ்தக் போன்றவை செய்திகளாக வெளியிட்டன.
மோடி ரோடுஷோவிற்காக சில சாலைகள் முழுவதும் வாரம் முழுவதும் பயன்பாடு தடைசெய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் போது கருநாடகாவில் இரண்டு இடத்தில் மோடி ரோடுஷோ நடத்தினார். இதற்காக 22 கோடிகள் வரை செலவு செய்ததாக செய்திகள் வெளிவந்தனர். அய்ரோப்பிய நாடுகளில் இருந்து மலர்கள் இறக்குமதி செய்ததாகவும் ஆங்கில செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் மோடியின் பீகார் ரோடு ஷோ மிகவும் விலையுயர்ந்ததாகத்தான் இருக்கவேண்டும் அதைத்தான் மோடியும் விரும்புவார். அதாவது ஒரு பிரபலம் சாலையில் அரைமணி நேரம் செல்கிறார். அவ்வளவுதான் அதற்காக பல கோடி ரூபாய்கள் செலவு செய்கிறார்கள். இது பீகார் அரசு பணமோ, ஒன்றிய அரசு பண்மோ எதுவாக இருந்தாலும் அது மக்கள் பணம்.
சாலையில் மோடியின் சில மணி நேரப்பயணத்திற்கு பல கோடி ரூபாய்கள் செலவு செய்யும் அரசுகள் வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளதா என்றால் பெரிய கேள்வி? இந்த நிலையில் பீகார் மாநிலத்தின் முசபர்பூர் மாவட்டத்தின் கல்யாண்பூர் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் நுழைவாயில் தான் இது.
கல்யாண்பூர் நகரில் உள்ள மொத்தம் 8 ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமையிடம் தான் இது. ஹெல்த் அண்ட் வெல்னஸ் செண்டர் என்று ஹிந்தியில் பெரிய எழுத்தில் எழுதப்பட்ட அந்த போர்டில் மாவட்ட சுகாதாரத்துறை கமிட்டி என்று எழுதப்பட்ட இந்த பெரிய மருத்துவமனையில் மொத்தம் 15 படுக்கைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இது உள்புறமோ அல்லது வெளிப்புறமோ அல்ல, நகரத்தில் உள்ள சுகாதார மய்யத்தின் நுழைவாயில் தான் இது. இங்கு மருத்துவர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் மாதம் மாதம் சம்பளம் பெறுகின்றனர். நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து செல்கின்றனர். என்று நகைச்சுவையாக வாய்ஸ் ஆப் பீகார் செய்தியாளர் குறிப்பிடுகிறார். மோடியின் சில நிமிட ரோடுஷோவிற்கு 20 கோடி ரூபாய்களை செலவு செய்யவேண்டிய நிலையில் இந்த சுகாதார நிலையத்திற்கு செலவு செய்ய அரசிடம் நிதி இல்லையாம்!!!!