பகுத்தறிவு

0 Min Read

வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லையே என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப் போட்டித் தொல்லையும் எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப் பகுத்தறிவு இல்லை என்றும் எந்த நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத் திருப்தியுடன் இருப்பார்களானால் அந்த நாட்டில் பகுத்தறிவு ஆட்சி புரிகிறது என்றும்தான் அர்த்தம்.

* * *

நம் மக்கள் பக்குவமடைய-மனித அறிவு பெற இன்னும் எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தமிழ்நாடு ஒரு பிரளயத்தால், புயலால், வெள்ளத்தால், பூகம்பத்தால் அடிப்படை உட்பட அழிந்து புதுப்பிக்கப்பட்டாலொழிய விமோசனமில்லையென்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
-தந்தை பெரியார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *