கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.5.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் தமிழ்நாடு அரசின் 7ஆவது நிதி ஆணையம் அமைப்பு.

* அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க்  அறிவிப்பு.

தி இந்து:

*அசோகா அரசியல் அறிவியல் பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியரான அலி கான் மஹ்முதாபாத் மீதான குற்றவியல் குற்றச் சாட்டுகளை “அபத்தமானது ” என்று கூறி, 79 மேனாள் அரசு ஊழியர்களை கொண்ட அரசமைப்பு நடத்தை குழு கண்டித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபி, சாவர்க்கரின் உருவப்படத்தை மாட்டியுள்ளது. இது, விதிமுறைகளை மீறிய செயல் என பிற மாணவர் அமைப்புகள் கண்டனம்.

தி டெலிகிராப்:

* ஆராய்ச்சித் துறையில் இந்தியா முதலில் கவனம் செலுத்த வலியுறுத்துகிறார், தொழில் அதிபர் சுனில் மிட்டல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஆளுநர் இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய நிலையில், முஸ்லிம் இடஒதுக்கீடு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கருநாடக அரசு பரிசீலித்து வருகிறது.

* தைரியம் இருந்தால் நாளை தேர்தலை நடத்துங்கள், மோடிக்கு சவால் விடுகிறார் மம்தா. “எல்லா இடங்களிலும் சிந்தூரை விற்று”, “அரசியல் ஈர்ப்புக்காக” ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துகிறார்கள் என மோடி மீது விமர்சனம்.

* உற்பத்தி வாய்ப்புகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால், வரிப் போர்கள் தொடங்கப்படலாம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு மாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்கிறார்கள் கட்டுரையாளர்கள் ஆஷிஷ் தவான் நிறுவனர்-தலைமை நிர்வாக அதிகாரி & தோஷி தி கன்வர்ஜென்ஸ் பவுண்டேஷனின் செயல்பாட்டு பங்குதாரர்.

*கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மய்யத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

– குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *