பகுத்தறிவாளர் கழக தோழர் ஆரணி மு.பாண்டியன் நெடுஞ்செழியனின் மூன்று நூல்கள் தமிழர் தலைவரின் அணிந்துரையுடன் வெளியீட்டு விழா

Viduthalai
1 Min Read

ஆரணி, மே 27– திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம் பகுத்தறிவாளர் கழக தோழர் மறைந்த மு.பாண்டியன் நெடுஞ்செழியன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழா 25.5.2025 ஆரணிபாளையம் விஜய சிறீமகாலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் சி.அப்பாசாமி தலைமையில், பி.கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் மு.தென்னரசு வரவேற்பு நிகழ்த்தி அனைவருக்கும் சால்வை அணிவித்தார்.

‘விஞ்ஞானப் பூர்வ சிந்தனை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்த கட்டுரை தொகுப்பினை எழுத்தாளர் பெரணமல்லூர் ந.சேகரன் வெளியிட பி.மாரிமுத்து பெற்றுக் கொண்டார்.

‘இன்னொரு தாய்‘ சிறுகதை தொகுப்பினை கவிஞர் நா.முத்துவேலன் வெளியிட ஆரணி திராவிடர் கழக அமைப்பாளர் இராவண அதியமான் பெற்றுக் கொண்டார்.

திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வழங்கிய அணிந்துரையுடன் ‘நியுட்ரான் நட்சத்திரங்கள்‘ கவிதை தொகுப்பினை முனைவர் கு.பிரேமா வெளியிட ஆரணி தி.மு.க. செயல்வீரர் எ.புகழேந்தி பெற்றுக் கொண்டார். புத்தகங்களை அழகுடன் வடிவமைத்த அறம் பதிப்பகம் உரிமையாளர் பா.அமரேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வி.வெங்கட்ராமன், மருத்துவர் இ.மதன்குமார், மருத்துவர் பா.தேன் தமிழோசை, ம.தாஸ், அ.இராஜன், பி.பாஸ்கர பாண்டியன், ஆசிரியர் பன்னீர் செல்வம், பெரு.பழனி, உதகை வாசுதேவன், மு.வெங்கட்ராமன், காட்பாடி மு.மனோகரன், நல்லாசிரியர் பி.இரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூல்கள் மிக சிறப்பாக வெளியிட முக்கிய செயலாற்றிய பழங்காமூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ப.சம்யுக்தா பாண்டியன் நெடுஞ்செழியன் ஏற்புரை நிகழ்த்தினார். ச.வி.நகரம் ஊரக வளர்ச்சி இளநிலை உதவியாளர் பா.லெமூரியர் செழியன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியை முனைவர் மு.தமிழ்மொழி தொகுத்து வழங்கினார். உறவினர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், அனைத்துக் கட்சி தோழர்கள், பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், வணிக பெருமக்கள் உள்பட ஏராளமானோர் புத்தக வெளியீட்டு வழிவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *