வாட்ஸ் அஃப் செய்திகள், எச்சரிக்கை!

3 Min Read

சென்னை, மே 26 வாட்ஸ் ஆப் மூலம் வரும் செய்திகளில் நன்மைகள் இருப்ப தைப் போல தீமைகளும் இருக்கின்றன. வாட்ஸ் ஆப் மூலம் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துவிட்டன.

நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நமக்கு ஒளிப்படங்கள், செய்திகள், மீம்கள் போன்ற பலவற்றை அனுப்புவார்கள். முன் பின் தெரியாத நபர்கள் அல்லது நிறுவனங்களில் இருந்து கூட மெசேஜ் வரும். இதை நீங்கள் சாதாரணமான ஒன்றாக நினைக்கலாம். ஆனால் இதில் ஒரு மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடவு சொற்கள்
கேட்டு…

ஹேக்கர்கள் வாட்ஸ் அப்பில் படங்கள் அல்லது மீம்ஸ்களை நமக்கு அனுப்பி அதன் மூலம் அலைபேசியில் மால்வேர் அல்லது ஸ்பைவேரை நிறுவ மோசடி செய்கின்றனர். இந்த மோசடியில் நிறையப் பேர் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. உங்கள் வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள், சமூக ஊடகக் கணக்குகள், குடும்ப ஒளிப்படங்கள் மற்றும் கடவுச்சொற்களை திருடி அதன் மூலம் மோசடி செய்கின்றனர்.

ஒரே ஒரு கிளிக்கில் உங்கள் வங்கிக் கணக்கு காலியாகலாம். அதாவது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நொடிப் பொழுதில் திருடிவிடுவார்கள். மோசடி செய்பவர்கள் கவர்ச்சிகரமான அல்லது வேடிக்கையான படங்கள் அல்லது மீம்ஸ்களை உங்களுக்கு அனுப்புவார்கள். அவை உங்களுக்கு சாதாரணமான மெசேஜாகத் தெரியும். ஆனால் நீங்கள் அவற்றைப் பதி விறக்கம் செய்தவுடன், உங்கள் தொலைபேசியில் ஒரு ஆபத்தான மென்பொருள் உங்களுக்கே தெரியாமல் இன்ஸ்டால் ஆகிவிடும்.

சைபர் மோசடி

இது உங்கள் கீபோர்டில் நீங்கள் டைப் செய்யும் அனைத்தையும் பதிவு செய்யும். அது உங்கள் வங்கி கடவுச்சொல், OTP (ஒரு முறை கடவுச்சொல்), கிரெடிட் கார்டு விவரங்கள் மற்றும் பிற ரகசிய தக வல்களை திருட வழிவகுக்கும். இந்த மென்பொருள் உங்கள் தொலைபேசியின் கேமரா மற்றும் மைக்ரோஃபோனையும் ஹேக் செய்து விடும். இது உங்களை உளவு பார்க்கும் ஒரு கருவியாக செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த வகையான சைபர் மோசடிக்கு நீங்கள் பலியாகிவிட்டால் பெரிய இழப்புகளைச் சந்திக்க நேரிட லாம்.

ஹேக்கர்கள் உங்கள் வங்கிச் சான்றுகளைத் திருடி உங்கள் கணக்கி லிருந்து பணத்தை எடுத்துவிடுவார்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகக் கணக்குகளை ஹேக்கர்கள் கட்டுப்படுத்துவார்கள். மேலும் அவர்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் நீங்கள் பேசுவதுபோல பேசி ஏமாற்றலாம்.

உங்கள் ஒளிப்படங்கள், காட்சிப் பதிவுகள் மற்றும் தொலைபேசியில் சேமிக்கப்பட்ட முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றைத் திருடிவிடுவார்கள். இதுபோன்ற சைபர் மோசடிகளைத் தவிர்க்க நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

உங்களுக்கு அனுப்பப்படும் மீம் எவ்வளவு கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும், உங்களுக்குத் தெரியாத அல்லது சந்தேகம் இருக்கக்கூடிய எண்களிலிருந்து எந்த படங்களையும் அல்லது செய்திகளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான படங்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம். நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் மோசடியில் சிக்கிவிடுவீர்கள். உங்கள் தொலைபேசியில் நம்பகமான வைரஸ் தடுப்பு அல்லது பாதுகாப்பு செயலியை இன்ஸ்டால் செய்து அதை எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும்.

ஆப்பிள் ஆப் ஸ்டோர்

உங்களுடைய முக்கியமான கணக்குகளின் (வங்கி, சமூக ஊடகங்கள், மின்னஞ்சல்) கடவுச்சொற்களை அடிக்கடி மாற்ற வேண்டும். யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வலுவான, தனித்துவமான கடவுச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும். கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டும் ஏதேனும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது நல்லது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *