சேலம், மே 25- சேலம், மேட்டூர், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலந்து உரையாடல் கூட்டம் 19.05.2025 திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி, டிவிஎஸ் நகர், வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வழக்குரைஞர் கோ.கல்பனா பகுத்தறி வாளர்களாக மாநகர செயலாளர் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் ச சுரேஷ்குமார் சேலம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் தலைமை ஏற்று உரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு சேலம் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, திராவிட கழக மாவட்ட செயலாளர் சி.பூபதி மேனாள் மாவட்ட செயலாளர் அ.ச.இளவழகன், ஆத்தூர் பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் வ.முருகானந்தம், மேட்டூர் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மதியழகன், மேட்டூர் பகுத்தறிவாளர் கழக பூ. வீரமணி, பகுத்தறிவு கழக கலைத்துறை மோ.தங்கராஜ், பொறியாளர் டி. சிவகுமார்,சூரமங்கலம் ராசு, வழக்கறிஞர் வேல்.சோ.அசோகன், வழக்கறிஞர் மங்கை, யமுனாதேவி ஆகியோர் முன்னிலை வகித்து உரை ஆற்றினர். கலந்துரையாடல் நோக்கம் குறித்து பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.மாயக்கண்ணன் தொடக்க உரை ஆற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் வாழ்த்துரையாக கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் செயல்படும் தன்மைகள் குறித்தும் சேலம், மேட்டூர், ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகங்கள் செயல் பாடுகளை பாராட்டியும் 27.05.2025 செவ்வாய்க்கிழமை சேலத்தில் குடும்பங்கள் கலந்து உறவாடும் நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்ச்சிக்கு கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் வருகை தர இருக்கிறார்கள். அனைவரும் குடும்ப விழாவிற்கு வருகை புரிய வேண்டும் என்றும், குடும்ப விழாவின் நோக்கம் குறித்தும் வாழ்த்துரை வழங்கினார். கருத்துரையாக பகுத்தறிவாளர்களாக மாநில பொதுச் செயலாளர்(ஆசிரியர் பிரிவு) வ.தமிழ் பிரபாகரன் சேலம், மேட்டூர்,ஆத்தூர் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் இந்த மாத நிகழ்ச்சிகளாக அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா நடத்த வலியுறுத்தி பேசினார்.
பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி. மோகன் பகுத்தறிவாளர் கழகத்தின் கடமைகள் குறித்து கருத்துரையாக வழங்கினார் சேலம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவராக வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன், மாவட்ட துணை தலைவராக பொறியாளர் சிவக்குமார், செயலாளர் வழக்கு ரைஞர் ச.சுரேஷ்குமார், துணைச் செயலாளர் மோ.தங்கராஜ், துணைச் செயலாளர் விக்னேஷ், மாநகர தலைவர் வழக்கறிஞர் கோ.கல்பனா, மாநகரச் செயலாளர் சி.வாசுகி, கழக மாவட்ட பொறுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிவிப்பு செய்தார்.
பின் மாவட்ட கழகங்கள் மாதாந்திர கூட்டம் நடத்த வலியுறுத்தி பேசினார். மாநில கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் சிறப்பு விருந்தினராக வருகை புரியும் கழக குடும்பம் கலந்து உறவாடல் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை புரிய உறுதியளிக்க வேண்டும் என தெரிவித்தார். பின் தீர்மானம் வாசிக்கப்பட்டது பகுத்தறிவாளர் கழக புதிய தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்ட வழக்குரைஞர் வேல்.சோ.அசோகன் பெயர் பலகை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி மோகன் அவர்களும் பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் தமிழ் பிரபாகரன் அவர்களும் திறந்து வைத்தனர் நிறைவாக மோ. தங்கராஜ் நன்றி உரை கூறினார்.