பெரியார் விஷன் ஓ. டி. டி. தளத்தில் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை முன்னெடுத்து செல்லும் விதத்தில் குறும்படங்கள், பிரபலங்களின் பேட்டிகள், பேச்சுக்கள், திரைப்படங்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன. அதில் நான் பார்த்ததில், தந்தை பெரியார் பற்றி பிரபலங்களின் பார்வை என்ற பகுதியில் பிரபலங்களின் பேச்சு மிகவும் இரசிக்கதக்க விதத்தில் இருந்தது. பெரியார் அவர்களையும், அவர் சிந்தனைகளையும் எந்தளவிற்கு அவர்கள் உள்வாங்கி உள்ளார்கள் என்பதை பார்க்கும் நமக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அப்படி தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசிய பிரபலங்களின் பேச்சுக்கள் சில.
திரைப்பட நடிகர் டி. ஆர். சிலம்பரசன் அவர்கள் “தந்தை பெரியாரை பற்றி ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், “கடவுளை மற மனிதனை நினை” அவ்வளவுதான். சக மனிதர்கள், தங்களை சுற்றியுள்ள மனிதர்களைப் பற்றியே நினைக்காத போது கடவுளை நினைத்து என்னதான் பயன்? எனக்கு பல்வேறு பிரச்சினைகள் வரும் போது எனக்கு தன்னம்பிக்கை கொடுக்கக்கூடியவர்கள் இரண்டு பேர். ஒருவர் என் தந்தை மற்றொருவர் தந்தை பெரியார். பெரியார் பற்றிய பாடல் ஒன்றை வெளியிட்டோம்.
அதற்கு ‘பெரியார் பாட்டு’ என்று பெயர் வைக்கவில்லை. ‘பெரியார் குத்து’ என்று தான் வைத்தோம். அதற்கு காரணம் அவருடைய பேச்சு ஒவ்வொன்றும் அடி, இடி, குத்து மாதிரி இருக்கும். அதற்கு தான் பெரியார் குத்து என்று பெயர் வைத்தோம். ஒரு ஆணாக இருந்து பெண் விடுதலைக்காக பாடுபட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மட்டுமே. இன்றைய காலகட்டத்தில் பெரியாரை உயர்த்திப் பிடிப்பது காலத்தின் தேவை. இதை செய்வது என் கடமை” என்று பேசியிருந்தார்.
அதே போன்று திரைப்பட இயக்குனர், நடிகர் இரா. பார்த்திபன் அவர்களின் பேச்சின் ஆரம்பமே கலகலப்பாக இருந்தது. அவர், “தந்தை பெரியார் என்ற கடவுளை வணங்கி என் பேச்சை ஆரம்பிக்கின்றேன். இங்கே கடவுள் என்பது கட- உள் ஆதாவது உன்னை கடந்து உள்ளே செல். சாரசரி அறிவை கடந்து பகுத்தறிவு என்ற நுண்ணறிவைக் கொண்டு பார்க்கக் கூடிய அந்த பகுத்தறிவு பகலவனை, பகுத்தறிவு கடவுள் என்கிறேன். இங்கே அனைவரையும் மானமிகு என்று குறிப்பிட்டார்கள், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை நான் பின்பற்ற வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார்.
பிறகு, தன் சட்டை பாக்கட்லிருந்து ஒரு கண்ணாடியை எடுத்துக் காட்டி, “இது போன்ற கண்ணாடியை தான் பெரியார் அவர்கள் அணிவார்கள், அவர் நினைவாகத் தான் இந்தக் கண்ணாடியை நான் வாங்கி வைத்துள்ளேன். இது கிட்ட பார்வைக்கோ! தூரப் பார்வைக்கோ! அல்ல சமூக பார்வைக்கு. சமூக பார்வைக்கு கண்ணாடியாகவே விளங்கியவர் தந்தை பெரியார் அவர்கள். அவர் தேவஸ்தான தலைவராக இருந்தபோது கோயில்களுக்கு ஆறு கால பூஜை செய்து ஒரு கோவிலுக்கு இருந்த ரூ. 45,000 கடனை அடைத்தார் என்று படிக்கும் போது, தன் கொள்கை வேறாக இருந்தாலும், பொது வாழ்க்கையில் தான் ஏற்ற பொறுப்புக்கு மக்களின் நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிக்காமல் எவ்வளவு நேர்மையாக செயல்பட்டார் என்பது விளங்கியது.
நீ- வேறா, நான்- வேறா இருக்க கூடாது என்று பாடுபட்டவர் தான் இந்த ஈ. வெ. ரா. நீதிபதிகள் கூட தீர்ப்பு சொல்லும் போது பெரியார் என்ன சொல்லுகிறார் என்று அவரிடம் கேட்க ஆள் அனுப்புவார்கள் என்று கேள்விப்படும் போது, இத்தகைய காட்சியை சினிமாவில் ஹீரோக்கள் செய்வதாக நாங்கள் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.
Periyar Vision OTT-இல் காணொளிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக்கங்களிலும் வெளியிடப்படும்.
இணைப்பு :
periyarvision.com
உண்மையான ஹீரோ தந்தை பெரியார் அவர்கள் தான். இங்கே ஆன்மீக அரசியல் பற்றி குறிப்பிட்டார்கள். பெரியார் அவர்கள் பெண்மீக அரசியலை செய்தவர். அதாவது பெண் விடுதலை அரசியலை செய்தவர்” என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அடுத்து கவிஞர் வைரமுத்து அவர்கள் கவிதை வரிகளில்,
உங்களுக்கு எல்லாம் பெரியாரைப்பற்றி தெரிந்திருந்தால்…
உங்கள் உடம்பில் சிறகு முளைக்கும்
தன்னம்பிக்கை பிறக்கும்
அறிவை தேடி உங்கள் வாழ்கை நகரும்
மானம் உங்கள் இரத்தத்தில் எழுத்தப்படும்
பகுத்தறிவு உங்கள் மூளையில் பதியமாகும்…
…மற்றவர்கள் எல்லாம் தமிழை படித்து எழுதினார்கள்
தந்தை பெரியார் ஒருவர் மட்டுமே தமிழனை படித்து எழுதினார்
என்று தந்தை பெரியாரை புகழ்கிறார்.
இப்படி, எல்லாவற்றையும் இங்கே எழுதி விட்டால் எப்படி? இன்னும் பல பிரபலங்கள் இதில் இடம் பெற்றுள்ளார்கள். அதில் நடிகர்கள் சத்தியராஜ், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த், சூர்யா, இயக்குநர்கள் கரு பழனியப்பன், அமீர், பா. ரஞ்சித், பேராசியர் ஞானசம்பந்தம், RJ ஆனந்தி என்று பிரபலங்களின் சுவையான பேச்சுக்கள் உள்ளன. இவை அனைத்தையும் பார்த்து கேட்டு நம்மைப் போன்றே, பிரபலங்களின் வாழ்க்கையிலும் பெரியார் அவர்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பதை அறிந்து கொள்வோம்.
‘Periyar vision OTT’ தளத்தைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்யுங்கள். பொழுது போக்கிற்காக அறிவை மழுங்கடிக்கக் கூடிய, மூடநம்பிக்கையை வளர்க்கக் கூடிய எத்தனையோ ஊடக தளங்கள் உள்ளன. உலகிலேயே பகுத்தறிவை வளர்க்கக் கூடிய ஒரே தளம் ‘Periyar vision OTT’ மட்டுமே. ஆதரவு தருவோம் இத்தளத்திற்கு நம் பகுத்தறிவை வளர்த்துக் கொள்ள.
இப்படிக்கு
பெ. கலைவாணன், திருப்பத்தூர்.