மத்தியப் பிரதேசத்தில் வினோத ஒப்பந்தம் ரூ.20 லட்சம் கடனுக்காக பஞ்சாயத்து நிர்வாகத்தை காண்டிராக்ட் விட்ட பஞ்சாயத்து தலைவி குட்டு அம்பலமானதால் பதவி நீக்கம்

Viduthalai
2 Min Read

கரோட், மே 23  ரூ.20 லட்சம் கடனுக்காக பஞ்சாயத்து நிர் வாகத்தை காண்டிராக்ட் விட்ட பஞ்சாயத்து தலைவி பதவி நீக்கம் செய்யப்பட்டார். மத்திய பிர தேசத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கிராமப் பஞ்சாயத்துக்கள் என்ற அமைப்பு நீண்ட காலமாக உள்ளது.

கிராமப் பஞ்சாயத்து தலை வர்களுக்கு, காசோலையில் கையெழுத்திடும் அதிகாரமும் கொடுக்கப்பட் டுள்ளது. அதிகாரப் பரவலுக்காக உருவாக்கப்பட்ட கிராமப் பஞ்சா யத்து நிர்வாகத்தை, அதன் தலைவர் பதவியில் இருந்த பெண் ஒருவர், தனது சொந்த பணத்தேவைக்காக காண்டிராக்ட் அடிப்படையில் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கிராமப் பஞ்சாயத்து தலைவி

மத்தியப்பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள கரோட் கிராமப் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சர்பஞ்ச் லட்சுமி பாய். வார்டு கவுன் சிலராக இருப்பவர் ரன்வீர் சிங் குஷ் வாஹா. வசதி படைத்த இவர், காண்டிராக்ட் தொழிலும் செய்து வருகிறார் .

பஞ்சாயத்து தலைவி சர்பஞ்ச் லட்சுமிக்கு ரூ.20 லட்சம் வரை கடன் இருந்ததாக கூறப்படுகிறது.கடனை அடைப்பதற்காக அவர் ஒரு வினோத திட்டத்தை கையில் எடுத்தார். அதன்படி கவுன்சிலர் ரன்வீர் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதாவது சில காலம் கரோட் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகத்தை ஒப்பந்த அடிப்படையில் (காண்டிராக்ட்) ரன்வீர் சிங்குக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

வினோத ஒப்பந்தம்

இதற்காக 100 ரூபாய் பத்திரத்தில் அவர்களுக்கிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி பஞ்சாயத்து தலைவி சர்பஞ் லட்சுமியின் ரூ.20 லட்சம் கடனை ரன்வீர் சிங் ஏற்றுக்கொள்வது, ஒப்பந்த பணி களில் 5 சதவீத கமிஷன் கொடுப்பது என்றும், இதற்கு பிரதிபலனாக கிராமப்பஞ்சாயத்து நிர்வாகம் முழுவதையும் சில காலம் ரன்வீர் சிங் ஏற்று நடத்துவது என்றும் ஒப்பந்தம் முடிவானது.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஏற்பட்ட  இந்த ஒப்பந்தம் வெளியே உள்ள வர்களுக்கு யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த விவகாரம் தற்போது எப்படியோ வெளியே கசிந்து விட்டது.இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் சென்றது.

பஞ்சாயத்து தலைவி பதவி பறிப்பு

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் கன்யால் உத்தரவிட்டார். விசாரணையில், கிராமப் பஞ் சாயத்து நிர்வாகம் நடத்தும் அதிகாரம் ஒப்பந்த அடிப்படையில் ரன்வீர் சிங்கிற்கு விடப்பட் டது தெரியவந்தது.  இதையடுத்து சர்பஞ்ச் லட்சுமியை பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் ரன்வீர் சிங் மீது மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *