நீதிபதிகள் மைக்கை ஆஃப் செய்தனர் : பி.வில்சன்

Viduthalai
2 Min Read

பல்கலை., துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கான வாதத்தின்போது நீதிபதிகளின் மைக் மியூட் (Mute) செய்யப்பட்டதாக வழக்குரைஞர் பி.வில்சன் கூறியுள்ளார். மைக் ஆன் செய்த பிறகு உத்தரவு குறித்து கேட்டபோது, ஆர்டரை அப்லோடு செய்த பிறகு பாருங்கள் என்று சொன்னதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்–4

3,935 அரசுப் பணியிடங்கள்

டி.என்.பி.எஸ்.சி., குரூப்–4 பிரிவில் காலியாக உள்ள 3,935 கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளி யாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வரும் மே 24-ஆம் தேதிக்குள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை இணைய தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

பள்ளி மாணவர்களுக்கான நோட்புக் விலை 5 சதவீதம் குறைந்தது

நோட்புக் விலை இந்தாண்டு 5 சதவீதம் குறைந்துள்ளது. குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசுக்கு அடுத்தபடியாக அச்சுத் தொழில் பிரதானமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து நோட்புக் அச்சடித்து அனுப்பப் படுகின்றன. காகிதம், அட்டை உள்ளிட்ட மூலப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்ததால் நடப்பாண்டு ஒரு நோட்புக் மீது 2 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு செலவு மிச்சமாகும்.

 

தமிழ்நாடு அரசில் 615 காலிப் பணியிடங்கள்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

உதவி பொறியாளர் உள்ளிட்ட 47 பதவிகளுக்கான 615 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அமைப்பியல், மின்னி யல், வேளாண் பொறியியல் பதவிகளுக்கு ஆக.4 முதல் 10-ஆம் தேதி வரை கணினி வழியாகத் தேர்வு நடைபெறுகிறது. தேர் வர்கள் மே 27 முதல் ஜூன் 25 வரை www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை தேர்வர்கள் யுபிஅய் மூலம் செலுத்த வேண்டும்.

யூ.பி.எஸ்.சி., தேர்வு எழுதப்  போவேர்க்கு…

வரும் மே 25-ஆம் தேதி UPSC Prelims தேர்வு நடைபெறுகிறது. 2 தேர்வுகள்: முதல் (General Studies), 2- (CSAT) உள்ளன. தேர்விற்கு தயாராகுபவர்கள் இதை கண்டிப்பா  தெரிந்து கொள்ளுங்கள். CSAT-தாளுக்கும் கவனம் கொடுக்க வேண்டும்

* வினாத்தாளை புரிந்துக் கொள்ள, மாதிரி தேர்வுகளை எழுதி பாருங்கள்.

* நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது அவசியம்.

* பாடங்களில் கவனம் செலுத்துவது போல, நடப்பு நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும்
குவாரிகள் ஆய்வு : அரசு உத்தரவு

தமிழ்நாடு

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவகங்கை அருகே கல்குவாரியில் 20.5.2025 அன்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக பாதுகாப்பு நடைமுறைகளை குவாரிகள் முறையாக பின்பற்றுகின்றனவா?. முறைகேடாக குவாரிகள் செயல்படுகிறதா என்பதை மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *