டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்குரைஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு.
*டாஸ்மாக் “அமலாக்கத்துறை’ ரெய்டு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அப்பீல்! விரைந்து விசாரிக்க கோரிக்கை
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்கள் பணம் மக்களுக்கே கிடைக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். இந்தியாவின் மொத்த பணமும் குறிப்பிட்ட சிலருக்கு கிடைக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது-மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் உள்ள ஆகமம் பின்பற்றாத கோவில்களில் அனைத்து ஜாதியைச் சேர்ந்த அர்ச்சகர்கள் நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
தி இந்து:
* இந்திய பங்குச் சந்தை வாரியம் (செபி) அதானி குழும பங்குகளை வைத்திருக்கும் இரண்டு மொரீஷியஸை தளமாகக் கொண்ட வெளிநாட்டு நிதிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறும் ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி, நரேந்திர மோடி அரசு மற்றும் அதானி குழுமம் மீது காங்கிரஸ் தாக்கு.
* இந்தியாவிற்கு ஆதரவு தேவைப்படும் போது பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் உதவவில்லை: மோடி மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்கு.
* துருக்கியில் உள்ள இஸ்தான்புல் காங்கிரஸ் மய்யத்தை இந்திய தேசிய காங்கிரஸின் அலுவலகம் என்று “தவறாகவும், பொய்யாகவும்” சித்தரிக்கும் செய்தி அறிக்கையை வெளியிட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, பாஜக கட்சியின் அமித் மாளவியா மீது இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மகாராட்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசில் தேசிய காங்கிரஸ் (அஜித் பவார் அணி) தலைவர் சகன் புஜ்பால் அமைச்சராக பதவியேற்றார்.
* டில்லியில் நடைபெறும் மே 24ஆம் தேதி நடை பெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக கலந்து கொள்கிறார் மு.க.ஸ்டாலின்.
.- குடந்தை கருணா