பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரிக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் சிறந்த அத்தியாய தலைவர் விருது – முதல்வர் முனைவர் அ.ஹேமலதாவுக்கும், சிறந்த பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் விருது – மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் துறையைச் சார்ந்த விரிவுரையாளர் ஆர்.லலிதாவுக்கும், சிறந்த மாணவர் அத்தியாய ஆசிரியர் ஆலோசகர் விருது – முதலாம் ஆண்டு விரிவுரையாளர் எஸ்.மைக்கேல்ராஜ்வுக்கும் வழங்கப்பட்டது. மாநில அளவிலான நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் விருதுகள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் இரா.மணிவண்ணன்; மற்றும் அமைப்பியல் துறை பேராசிரியர் ப.முத்துகுமாரபதிக்கும் வழங்கப்பட்டது. இவ்விருதுகளைப் பெற்ற பேராசிரியர்களுக்கு நிறுவனத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பாராட்டினார். (தஞ்சை, 20.5.2025)
விருதுகளைப் பெற்ற பெரியார் பாலிடெக்னிக் பேராசிரியர்களுக்கு நிறுவனத் தலைவர் பாராட்டு

Leave a Comment