காரைக்குடி, மே 20- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, புரட்சி கவிஞர் பாரதிதாசன் 135ஆவது பிறந்தநாள், திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் திராவிடர் கழக தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் ம.கு.வைகறை தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சி.செல்வமணி வரவேற்புரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தனது உரையில் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், நீண்ட இடைவெளிக்கு பிறகு நடைபெறும் பரப்பரைக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களையும் ஊக்கப்படுத்தி உரையாற்றினார்.
பெரியார் பெருந்தொண்டர் கழக காப்பாளர் சாமி.திராவிடமணி கருத்துரையாற்றினார் . தனது உரையில்திராவிட மாடல் அரசு இந்த சட்டமன்றத் தொகுதிக்கு கொண்டு வந்த நலத்திட்டங்களை எடுத்துரைத்தார்.
திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.ரவி, பேரூர் திமுக செயலாளர் பி.ஆர்.அசோக் இருவரும் பொறுப்பாளர்களுக்கு பயனாடை போர்த்தி சிறப்பித்தார்கள்.
மாவட்ட தலைவர் வைகறை தனது உரையில், நூறாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் தீர்மானங்கள் தான் திராவிட மாடல் அரசின் சட்ட திட்டங்களாகவும், நலத்திட்டங்களாகவும், நாட்டிற்கே வழிகாட்டும் அரசாக விளங்குவதை எடுத்துரைத்தார்
திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர், கழக சொற்பொழிவாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில், தமிழர்கள் அறிவும் மானமும் பெற்றது தந்தை பெரியாரால், அவரது சிந்தனைகளையும் கொள்கைகளையும் திராவிட மாடல் ஆட்சி நடத்திட்டங்களாக, செயல்திட்டங்களாக செயல்படுத்தி வருவதையும் இந்த ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்கள் வெகுவாக உரையை கேட்டனர்.கல்லல் ஒன்றிய தலைவர் ஆ.சுப்பையா நன்றி கூறினார்.
நிகழ்வில் ப.க ஆலோசகர் சு.முழுமதி, மாவட்ட ப க தலைவர் துரை செல்வம் முடியரசன், மாநகர தலைவர் ந. ஜெகதீசன், கல்லல் ஒன்றிய செயலாளர் கொரட்டி வீ. பாலு, மாநகர துணை தலைவர் பழனிவேல் ராசன், திருமணவயல் பன்னீர்செல்வம், பெரியார் பிஞ்சு அன்பரசு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.