எமது உளமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

1 Min Read

அரசியல்

‘‘90 இல் 80” என்று மிகக் குறுகிய காலத்தில் அறிவித்து, என்னை ஒப்புக்கொள்ளச் செய்து, வெகுசிறப்புடன் நேற்று (27.6.2023) சென்னை சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில் மாலை 5.30 மணிக்குத் தொடங்கி இரவு 9.15 மணிவரை நடத்தப் பெற்ற நிகழ்ச்சி மனதளவில் எனக்கொரு புத்தாக்க இளமையைத் தந்த கொள்கை வெற்றி விழாவின் வெளிச்சம் ஆகும்!

சற்றும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி! நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தமது வாழ்த்துச் செய்தியை, தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தோழர் திருச்சி என்.சிவா மூலம் அனுப்பி, என்னை உணர்ச்சிவயப்பட வைத்த நமது முதலமைச்சர் அவர்களுக்கு எனது பாசம் கலந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊக்க உரை ஆற்றிய கவிஞர் கலி.பூங்குன்றன், திருச்சி என்.சிவா எம்.பி., எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், சகோதரர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,  கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் புத்தகம் தயாரித்து, விழா ஏற்பாடுகளிலும் கடுமையாக உழைப்பைத் தந்து விழா வெற்றிக்குக் காரணமான அத்துணைத் தோழர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றி!

பாசத்துடன் கைகூப்புடன்

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.6.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *