விருதுநகர், மே 18- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், 15.05.2025 வியாழன் மாலை 6 மணியளவில், மல்லாங்கிணறு பேரூ ராட்சி அலுவலகம் அரு கில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகள் விளக்கப் பிரச்சாரக் கூட் டம் நடைபெற்றது.
மாவட்டத் தலை வர் கா.நல்லதம்பி தலைமையில், இராசை மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் துணைத் தலைவர் ந.ஆனந்தம், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் ஆகியோர் முன்னிலையில் காரியாபட்டி ஒன்றியக் கழக அமைப்பாளர் வீ.ஆதி மூலம் அனைவரையும் வர வேற்றார்.
உரத்தநாடு
இரா.குணசேகரன்
அருப்புக்கோட்டை நகர் கழகச் செயலாளர் பா.இராசேந்திரன், மல்லாங்கிணறு நகர தி.மு.க. செயலாளர் மா.முருகேசன் ஆகியோர் உரையாற்றினர். திரா விடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சிறப்புரையாற்றினார். கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் திராவிட மாடல் அரசின் வரலாற்றுச் சாதனைகளை விளக்கி நிறைவுரையாற்றினார்.
மல்லாங்கிணறு நகர காங்கிரஸ் தலைவர் பா.செல்வம் மற்றும் பொறுப்பாளர்கள் நிகழ்வில் பங்கேற்று கழகப் பொறுப்பாளர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பித்தனர்.
மாவட்டக் கழகக் காப்பாளர் அ.தங்கசாமி, அருப்புக்கோட்டை இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர் மற்றும் தோழமை இயக்க நண்பர்கள், பொதுமக்கள் என பெருமளவில் பங் கேற்றுச் சிறப்பித்தனர். நிறைவாக மாவட்ட ப.க. அமைப்பாளர் மா.பாரத் நன்றி கூற கூட்டம் நிறை வுற்றது.