டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சென்னை ஆவடி பள்ளி நீட் தேர்வு மய்யத்தில் மின் தடை காரணமாக தேர்வினை சரியாக எழுத முடியவில்லை என்ற வழக்கின் அடிப்படையில் நீட் யு.ஜி. தேர்வு முடிவுகள் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாகிஸ்தானுக்கு அய்.எம்.எப். கடன் கிடைப்பதில் அமெரிக்காவின் அழுத்தத்ததிற்கு இந்தியா பணிந்து அமைதி காத்துள்ளது, காங்கிரஸ் குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி பாக்.கிற்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்தது ஏன்?.. ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
தி டெலிகிராப்:
* ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை பற்றி விளக்கும் பன்னாட்டு குழுவுக்கு காங்கிரஸ் 4 பேரைக் குறிப்பிட்டு கொடுத்தது. ஆனால் அதில் யாரும் இல்லாமல் சசிதரூர் பெயரை சேர்த்திருக்கிறார்கள். இது நேர்மையற்ற செயல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* குஜராத் வதோதரா: தாஹோத் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தொடர்புடைய ரூ.71 கோடி ஊழல் தொடர்பாக குஜராத்தில் காவல்துறையினர் பஞ்சாயத்து துறை இணை அமைச்சர் பச்சு கபாத்தின் மூத்த மகனை கைது செய்தனர். பல வாரங்களாக கைது செய்யாமல் தப்பித்த பின்னர் பல்வந்த் கபாத் பத்வாடா சுங்கச்சாவடி அருகே கைது செய்யப்பட்டார்.
* உ.பி. மீரட் பல்கலைக்கழகத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை இதழியல் பாடத்தில் சேர்ப்பு.
– குடந்தை கருணா