ஓய்வூதியக்காரர்களுக்கு கருவூலம் மற்றும் கணக்கு துறை அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூன் 28 – ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத் தில் தங்களது இருப்பை மெய்ப்பிக்கும் வகையில், கருவூலங்களில் நேர்காண லில் பங்கேற்க வேண்டும். இந் நிலையில், நேர்காணலை எளிதாக் கும் வகையில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஓய்வூதியர்களுக்கு ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய குறிப் பிட்ட 3 மாதங்களில் நேர்காணல் செய்யப்படுகிறது. அந்த காலத்தில் அதிகளவிலான ஓய்வூதியர்கள் கருவூலத்தில் காத்திருந்து நேர் காணல் செய்வதை எளிமையாக்கும் நோக்கத்தில் சிவில் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பின் தாங் கள் ஓய்வுபெற்ற மாதத்திலும், குடும்ப ஓய்வூதியம் அல்லது சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்க ளுக்கு ஓய்வூதியம் தொடங்கப்பட்ட மாதத்திலும், சிவில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் என இரட்டை ஓய்வூதியம் பெறுவோர் தாங்கள் ஓய்வுபெற்ற மாதத்திலும் நேர்காணலில் பங்கேற்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

இருப்பினும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு தாங்கள் ஓய்வு பெற்ற மாதம், தங்களுக்கு குடும்ப ஓய்வூதியம் தொடங்கப் பட்ட மாதம் தெரியாத நிலையில் தங்களுக்கு விருப்பமான எந்த மாதத்திலும் இந்த ஆண்டுக்கான நேர்காணலில் பங்கேற்கலாம். மேற்கண்ட நடைமுறையின்படி ஒவ்வொரு ஓய்வூதியர்களுக்கு தாங்கள் எந்த மாதம் நேர்காணல் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஓய்வூதியர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப் படும். 

மேலும்www.karuvoolam.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது நேர் காணல் மாதம் குறித்து அறிந்து கொள்ளவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *