தென்காசி, மேலப்பாவூரைச் சேர்ந்த பெரியார் பற்றாளரும், திராவிட இயக்கத் தோழருமான
இரா.பேச்சிமுத்து (வயது 77) மறைந்தார் (15.5.2025) என்பதை அறிந்து வருந்துகிறோம்.
குற்றாலம் நகர திமுகவின் மேனாள் பொருளாளராகவும், தென்காசி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்ட, இரா.பேச்சிமுத்து குற்றாலத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளின் வெற்றிக்கு எப்போதும் துணை நிற்பவர். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவிற்கும் மட்டுமல்ல, திராவிடர் கழகத்திற்கும் பேரிழப்பு ஆகும். பேச்சிமுத்து போன்ற எளிய தோழர்களின் உழைப்பே திராவிட இயக்கத்தின் மாபெரும் பலமாகும்.
அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
17.5.2025