டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பியிருந் தார். இது குறித்து எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை பற்றி பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆபரேஷன் சிந்தூர்: “பிரதமர் மோடியின் காலடியில் ராணுவ வீரர்கள்”.. ம.பி துணை முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை!
* “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மொத்த நாடும், ராணுவ வீரர்களும்” பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்கினர்” என்று மத்தியப் பிரதேச துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
தி இந்து:
* மராத்தா ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வை அமைத்தது.
* ஆளுநர் அதிகாரம் குறித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் விதித்த மூன்று மாத காலக்கெடு ஒன்றிய அரசு 2016ல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இரண்டு அலுவலக குறிப்பாணைகள் மூலம் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது.
* காங்கிரஸ் கட்சியின் சிக் ஷா நியாய் சம்வாத் திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் உரையாடுவதை தடுக்க மாநில அரசு முயற்சிப்பதாக பீகார் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* ஆளுநர் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவரின் கருத்து கேட்பு, முடிவு செய்யப்பட்ட ஒரு கேள்வியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கிறது
தி டெலிகிராப்:
* மோடியை விமர்சிக்கும் ’குஜராத் சமாச்சார்’ பத்திரிகை அதிபர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.
டைம்ஸ் ஆப் இந்தியா:
*பீகாரில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் குடியேறி வாழும் பீகார் தொழிலாளியின் மகள் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் 93 மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
– குடந்தை கருணா