நாகர்கோவிலில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

2 Min Read

நாகர்கோவில், மே 16– நாகர் கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பி னர் மு.இராசசேகர் வரவேற்புரை யாற்றினார்.

மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்க வுரையாற்றினார். கோட்டாறு பகுதி தலைவர்  ச.ச.மணிமேகலை, குமரி க.யுவான்சு, பெருமாள் ஆகியோர் புரட்சிக்கவிஞரின் பாடலை பாடினார்கள்.

காப்பாளர் ம.தயாளன், மாவட்ட ப.க.தலைவர் உ.சிவதானு,  சிபிஅய் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் சிறப்புரை யாற்றினார். புரட்சிக்கவிஞரின் சிறப்பு, தந்தை பெரியாருடைய தொண்டுகள், பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, தமிழர்தலைவர் ஆசிரியர், டாக்டர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போன்ற தலைவர்களின் தொண்டுகளை எடுத்துக்கூறி திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டார். பா.ஜ.க வின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டியதின் நோக் கத்தையும் எடுத்துக் கூறினார்.

மாவட்ட கழகத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், நாகர்கோவில் மாநகர கழக தலைவர் ச.ச கருணாநிதி, இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், பகுத்தறிவாளர்கழக மாவட்டச் செயலாளர் பெரியார் தாஸ், கழகத் தோழர்கள் பி.கென்னடி, பா.சு.முத்துவைரவன், டாக்டர் அருள் அமலன், தி.ஞானவேல், மு.இராசன், மு.பால்மணி, வில்லுக்குறி செல்லையன் மற்றும் ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நாகர்கோவில் பூங்காவில் தொடங்கப்படும் அறிவியல் மய்யம்  கோளரங்கத்திற்கு தந்தை பெரியாருடைய பெயரை சூட்ட வேண்டும் எனவும், குமரிமாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைய காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணிக்கு உறுதுணையாக இருந்த தியாகி பொன்னப்பருக்கு குமரிமாவட்டத்தில் முழு உருவ வெண்கல சிலை அமைக்க உத்தர விட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவிப்பது, தோவாளையில் நடைபெற்று வரும் கவிமணி மணிமண்டப பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சுசீந்திரம் கிராம அலுவலகத்தில் உள்ள கவிமணி சிலையை சுசீந்திரம் எஸ்.எம். பள்ளி வளாகத்திலே  சிலையை நிறுவ வேண்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.அலெக்சாண்டர் நன்றியுரை யுடன் கூட்டம்நிறைவுபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *