சூரியப் புயல் பூமியை தாக்குகிறதா?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சூரியின் உள்ள மிகப் பெரிய சூரியப் புள்ளியான AR4079இல் பள்ளத்தாக்கு போலக் காட்சியளிக்கும் ஒளி பாலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒளி பாலம் எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறலாம்.. ஒருவேளை அது வெடித்துச் சிதறும் போது பூமியை நோக்கி மணிக்குச் சுமார் 700 கிமீ வேகத்தில் சூரியப் புயல் வீசும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டில் சூரியன் மிகவும் ஆக்டிவாக இருந்தது. இதனால் தான் உலகின் மிகவும் வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக 2024 உருவெடுத்தது. இந்தாண்டு வெப்பம் குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு நேர் எதிராக வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே இந்தாண்டும் சூரியன் அதேபோலவே ஆக்டிவாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..

சூரிய புயல்

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலே பூமி வழக்கத்திற்கு மாறாக வேகமான சூரிய புயலை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூரிய புயல் வினாடிக்கு 700 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைத் தாக்கியுள்ளது. இது சிறிய G1-வகுப்பு புவி காந்தப் புயல்களை உருவாக்கியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரியனில் உள்ள ஒரு பெரிய கொரோனல் துளை காரணமாகவே இந்தச் சூரியப் புயல் ஏற்பட்டுள்ளது. கொரோனல் என்ற இந்த இடத்தில் தான் சூரிய காந்தப்புலம் திறக்கும். இங்கிருந்து வெளியேறும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் அதிவேகமாகப் பூமியை நோக்கிப் பயணிக்கும். இருப்பினும், இதனால் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை.

சூரிய புள்ளி

அதேநேரம் சூரியனின் மிகப் பெரிய சூரியப் புள்ளியான AR4079, இன்னும் அமைதியாகவே உள்ளது. இதை ஆய்வாளர்கள் புதிராகவே பார்க்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு பெரிய சூரியப் புள்ளி சக்திவாய்ந்த சூரியக் கதிர்களை வெளியிடும். ஆனால் AR4079 இதுவரை ஒரு சில பலவீனமான C-வகுப்பு சூரியக் கதிர்களை மட்டுமே உருவாக்கியுள்ளது. இந்த அசாதாரண அமைதியே ஆய்வாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் இது புயலுக்கு முந்தைய அமைதியாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *